'தீரன்' பட 'பவாரியா' கும்பல் 'தோத்துப்போகும்'!.. பட்டப் பகலில் வீடுகளுக்குள் நுழைந்து .. 'நடுங்கவைத்த' கொள்ளை கும்பல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சின்ன எலசகிரி பகுதி வேலு நகரில் வசித்துவரும் தனியார் நிறுவன ஊழியர் பார்த்திபன். இவரது மனைவி சர்மிளா. கடந்த 2-ந் தேதியன்று மதியம் 3.30 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த பூமிகா என்கிற 21 வயது பெண், கிழிந்த துணிகளை தைத்து தருவதாக சர்மிளாவின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

அப்போது திபுதிபுவென திடீரென்று புகுந்த 5 பேர் சர்மிளா மற்றும் அவரது மகன்களை கத்தியை காட்டி மிரட்டி, சர்மிளா அணிந்திருந்த தாலி செயின், 2 தோடுகள், மோதிரங்கள் உள்ளிட்ட 8¼ பவுன் நகைகள் உள்ளிட்டவற்றை மிரட்டி பறித்துக்கொண்டு சென்று பறந்தனர். இது தொடர்பாக ஓசூர் சிப்காட் போலீசில் சர்மிளா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கொள்ளைக்கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 7-ந் தேதி பூமிகா மற்றும் பிரசாந்த் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் நேற்று பெங்களூரு அருகே பொம்மசந்திரதின்னே பகுதியை சேர்ந்த சஞ்சய்குமார் (25), ஒசதுர்கா பகுதியை சேர்ந்த புட்டராஜூ (25), அதே பகுதியை சேர்ந்த கிரண் (25) மற்றும் சிக்காரிபாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (23) உள்ளிட்டோரும் கைத்ய் செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 8¼ பவுன் நகைகளும், 3 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டனர்.

மற்ற செய்திகள்
