'நாங்க விருப்பப்பட்டு தான் உறவு வச்சிகிட்டோம்'...'ஆனா இப்படி திருட்டுத்தனம் பண்ணுவாருன்னு எதிர்பாக்கல'... கொளுத்திப்போட்ட இளம்பெண்ணின் விசித்திரமான புகார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாங்கள் விருப்பப்பட்டுத் தான் உடலுறவு வைத்துக் கொண்டோம், ஆனால் அவர் இப்படிச் செய்வார் என எதிர்பார்க்கவில்லை என இளம்பெண் ஒருவர் பிரான்ஸ் நாட்டுக்கான தூதர் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டுக்கான வெளிநாட்டுத் தூதர் ஒருவருக்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் இணையத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 44 வயதான அந்த தூதர் அந்த பெண்ணிடம் நெருங்கிப் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் சந்திக்க முடிவு செய்து உணவகத்தில் சந்தித்துக் கொண்டார்கள். பின்னர் பலமுறை இருவரும் நேரில் சந்தித்துப் பேசுவதை வழக்கமாகிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் இருவரும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து, முதல்முறையாக இருவரின் சம்மதத்துடன் உடலுறவும் நடைபெற்றது.
இந்நிலையில் சம்பவம் நடந்து மூன்றாவது நாளில் அந்த இளம்பெண் காவல்துறையை நாடி பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், ''எங்கள் இருவரின் சம்மதத்துடன் தான் உறவு நடைபெற்றது. ஆனால் அந்த தூதர் பாதுகாப்பற்ற முறையில் என்னுடன் உறவு வைத்துக் கொண்டார் எனத் தனது புகாரில் தெரிவித்திருந்தார். உறவுக்கு முன்பு தான், உறவில் ஈடுபடுவதற்கான பாதுகாப்பு முறைகளை மேற்கொள்வேன் என உறுதி அளித்த அவர், பின்னர் திருட்டுத் தனத்தில் ஈடுபட்டதாகத் தனது புகாரில் அந்த இளம்பெண் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட தூதர் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர் என உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது அந்த தூதர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். ஏனென்றால் பிரான்ஸ் நாட்டு சட்டப்படி, ஒரு பெண்ணை, கட்டாயப்படுத்துதல், மிரட்டிப் பணியவைத்தல், எதிர்பாராத வகையில் உறவு வைத்தல் உள்ளிட்டவை பலாத்காரம் என்றே பார்க்கப்படுகிறது.
இருப்பினும் உறவில் திருட்டுத்தனம் செய்வதில் தெளிவான சட்ட வரைமுறை இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இளம்பெண் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த தூதருக்கு தற்போது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
