‘பைக்கில் வர அனுமதி இல்லை’!.. இனி இவங்களுக்கும் ‘இ-பதிவு’ கட்டாயம்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் ஒரு வார காலத்துக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுப்பதற்காக, இன்று (24.05.2021) முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது மிக இன்றியமையாத சில பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை அத்தியாவசியப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் (Industries Manufacturing Essential Commodities and Medical Supplies) மற்றும் தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறைத் தொழிற்சாலைகள் (Continuous Process Industries) ஆகியவை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், துறைமுகங்கள், விமான நிலையங்கள், சரக்கு கிடங்குகள், தொலைதொடர்பு சேவைகள், அத்தியாவசிய தரவு மையங்கள் மற்றும் பரமாரிப்பு பணிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தொழிற்சாலைகளுக்கு பணியாளர்களை அழைத்துவரும் நான்கு சக்கர வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மே 25-ம் தேதி முதல் தொழிற்சாலைகளின் வாகனங்கள் இ-பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் தொழிற்சாலை பணியாளர்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
