‘நாம எல்லாரும் ஒன்னா சேர்ந்து’.. ‘மாரடைப்பால் காலமான இளம் நடிகரும் மருத்துவருமான சேதுராமன் முன்னதாக வெளியிட்ட வீடியோ!’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 27, 2020 11:32 AM

நடிகர் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்  ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’. நகைச்சுவை கலந்து வெளியாகியிருந்த இந்த படம் வெளியான ஆண்டில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது சக்கைபோடு போட்டது.

doctor and actor sethuraman corona awareness video before he dead

இப்படத்தில், நாயகனாக நடித்தவர் தோல் மருத்துவர் சேதுராமன். இந்த படத்திற்கு பிறகு தமிழில் வாலிபராஜா, மீண்டும் சந்தானத்துடன் இணைந்து சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட திரைப்படங்களிலும் சேதுராமன் நடித்திருந்தார். இணையதள சேனல்களில் அவ்வப்போது தோல் மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு உரைகளையும் ஆற்றி வந்தார்.  இந்த நிலையில் சென்னையில் பணியாற்றி வந்த இவர் மாரடைப்பின் காரணமாக நேற்று இரவு எட்டு முப்பது மணி அளவில் திடீரென உயிரிழந்தார். இவர் இறப்பதற்கு முன்பாக தான் உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய ஆட்கொல்லி நோயான வைரஸ் பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோவில் பேசிய மருத்துவர் சேதுராமன், “கொரோனா சூழ்நிலை எல்லோருக்கும் தெரியும். இந்த வைரஸை மேலும் தடுக்க நாம் சமூகத்தில் இருந்து விலகியிருத்தல், பெரியவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளதால் அவர்களுடன் பாதுகாப்பாக பழகுங்கள், உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். 5 முதல் 14 நாட்கள் கொரோனா அறிகுறிகள் உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம், அந்த நாட்களில் நீங்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். இந்த சூழலில் குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம். அதோடு நமக்காக வேலை செய்யும் மருத்துவர்கள், டிரைவர்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கு உதவும் வகையில் நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்த வைரஸ் பரவாமல் இருக்க நாம் உதவுவதான்” என்று கூறியதோடு,  

“நாம் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து, ஒண்ணு சேராமல் இருப்போம்!” என்று குறிப்பிட்டிருந்தார்.  இந்த இளம் வயதில் சேதுராமனின் உயிரிழப்பு திரை உலகையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 

Tags : #SETHURAMAN #RIPSETHURAMAN #CORONAALERT #CORONAAWARENESS