எங்க புள்ளைங்களும் 'கெத்து' தான்னு காட்டணும்...! 'என் அம்மா தான் எனக்கு எப்போவுமே இன்ஸ்ப்ரேஷன்...' சொந்த செலவில் ஆசிரியை உருவாக்கிய ஸ்மார்ட் கிளாஸ்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கல்வி கண் போன்றது என்பதை உணர்ந்த மாற்றுத் திறனாளி ஆசிரியர், தான் வேலை செய்யும் அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கி பாடம் எடுத்து வருகிறார்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 156 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இப்பகுதியில் வாழும் ஏழை மாணவர்களையும், முதல் தலைமுறையாக கல்வி கற்க வந்துள்ள மாணவர்களைக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிப்பதோடு மட்டும் அல்லாமல், பள்ளிக்கு வர இயலாத மாணவர்களை தானே சென்று அழைத்து வந்து கல்வி கற்க வழிவகை செய்கிறார் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி. இதே பள்ளியில் தான் ஹேம் குமாரி என்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் 4ஆம் வகுப்பு எடுத்து வருகிறார்.
ஹேம் குமரியின் அம்மாவும் ஒரு ஆசியராக பணிபுரிந்தவர். அதனாலேயே தன் அம்மாவை எடுத்துக்காட்டாக கொண்டு, முதுகலைப் பட்டம் மற்றும் கல்வியியல் பயின்று 2004-ல் தன் ஆசிரிய பணியை தொடங்கினார்.
கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்த ஹேம் குமாரி பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பச் சூழலைஅறிந்து, அவர்களுக்கு சிறந்தகல்வியைக் கொடுக்க முடிவெடுத்து,அவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை எடுக்கத் தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக பள்ளியில் கடந்த 2019-ம் ஆண்டு தனது சொந்த செலவில் ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறையை ஏற்படுத்தி அதன்மூலம் அவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறார்.
ஸ்மார்ட் வகுப்பறையில் புரொஜக்டர் மூலம் காட்சி வழியாக பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இது தவிர கற்பித்தலுக்கான துணைக் கருவிகள் மற்றும் உபகரணங்களைக் கொண்டு கூட்டல், கழித்தல், பெருக்கல் கணக்குகள் நடத்தப்படுகின்றன. மேலும், கைவினை தொழில்களையும் கற்றுத் தருகிறார் ஆசிரியர் ஹேம் குமாரி. இவரது செயலை அறிந்து, பல தன்னார்வ அமைப்புகளும் அவருக்கு விருது வழங்கி கவுரவித்து வருகின்றனர். அண்மையில் ஈரோட்டில்ரோட்டரி சங்கம் சார்பில் கவுரவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு தன்னுடைய முயற்சியை மட்டுமல்லாமல் தன்னுடன் பணிபுரியும் சக ஆசிரியர்களின் முயற்சியையும், ஒத்துழைப்பையும் குறிப்பிட்டு மனமகிந்தார். மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்களை அவருடைய குழந்தைகளாக பார்ப்பதால் தான் என்னுடைய குழந்தைகளுக்கு தரமான, சிறப்பான கல்வியை அளிக்க இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறார். இதன் மூலம் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது தனக்கு மிகுந்த சந்தோசம் தரும் விஷயமாக கருதுகிறார்.
