MISS TAMILNADU : வென்று காட்டிய கூலி தொழிலாளி மகள்.. "சின்ன வயசுல இருந்தே விடாமுயற்சி".. உருகும் பெற்றோர்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கட்டிட தொழிலாளி ஒருவரின் மகள் சாதனை புரிந்துள்ள செய்தி, பலரது பாராட்டுக்களையும் அவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.
Also Read | 1½ வருஷத்தில் 6 திருமணம் செய்த பெண்.. "இதுக்காக தான் நான் அப்டி பண்ணேன்".. பரபரப்பை கிளப்பிய வாக்குமூலம்!!
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் என்னும் பகுதியை சேர்ந்தவர் மனோகர். கட்டிட தொழிலாளியாக மனோகர் பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இவரது மகள் ரக்சயா. கல்லூரி படிப்பை முடித்துள்ள இவர், தனது சிறு வயது முதல் அழகி போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு பல முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் குடும்பம் வறுமை சூழ்நிலையில் இருந்ததையும் தாண்டி, தனது முழு முயற்சியில் பகுதி நேர வேலை என ரக்சயா தனி ஆளாக கடின உழைப்பையும் போட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்வில் கலந்து கொண்ட ரக்சயா, அதில் வெற்றி பெற்றதால் அரசு சார்பில் மலேசியா அழைத்து சென்று கவுரவிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் தேர்வான ரக்சயா, அதன் பின்னர் மாநில அளவிலான போட்டியிலும் தேர்வாகி இருந்தார்.
இந்தியாவில் இருந்து ஏராளாமானோர் இந்த அழகி போட்டியில் கலந்து கொண்ட நிலையில், தமிழகத்தை சேர்ந்த இளம்பெண்ணான ரக்சயா, மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனை புரிந்துள்ளார். மேலும், அனைத்து மாநிலங்களில் சார்பிலும் வின்னர், ரன்னர் என சுமார் 750 பேர் வரை இறுதி போட்டிக்கு தேர்வாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. மேலும், இதிலிருந்து ஒருவர் மிஸ் இந்தியா பட்டத்தை வெல்லவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இது பற்றி பேசும் ரக்சயா, நிச்சயம் மிஸ் இந்தியா பட்டத்தை தட்டிச் செல்வேன் என நம்பிக்கையுடன் குறிப்பிடுகிறார். மேலும் இது பற்றி பேசும் ரக்சயாவின் பெற்றோர்கள், சிறு வயது முதலே மகள் ரக்சயாவுக்கு விளையாட்டின் மீது அதிக ஆர்வம் இருந்தது என்றும், நாங்களும் அவரை ஊக்கப்படுத்தியதால், படிப்படியாக வளர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் மாறினார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
வறுமையில் நாங்கள் இருந்த போதும், மகளின் படிப்புக்கு சிலர் உதவி செய்ததால், தொடர்ந்து விடாமுயற்சியாக அவர் செயல்பட்டு, இன்று மிஸ் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்றுள்ளதாகவும் ரக்சயாவின் பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றனர்.
கட்டிட தொழிலாளியின் மகளாக இருந்து இன்று மிஸ் தமிழ்நாடு பட்டம் பெறும் அளவுக்கு உழைப்பினை மேற்கொண்ட இளம்பெண் ரக்சயாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.