சென்னை டூ புதுக்கோட்டை: சொந்த ஊரில் 'மனைவி'யை அடக்கம் செய்ய... சென்றவருக்கு 'நேர்ந்த' விபரீதம்... 'அதிர்ச்சி'யில் உறவினர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் இருந்து சொந்த ஊரில் மனைவியை அடக்கம் செய்ய சென்றவருக்கு நேர்ந்த விபரீதம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த மதியாணி பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவரும், 67 வயது மூதாட்டியும் சென்னையில் வசித்து வந்துள்ளனர். மூதாட்டி சில நாட்களுக்கு முன் இறந்து போனார். இதையடுத்து அவரை சொந்த ஊரில் அடக்கம் செய்திட ஆம்புலன்ஸில் அவருடைய உடலை எடுத்துக்கொண்டு முதியவர் சில உறவினர்களுடன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். ஊரில் உள்ள இடுகாட்டில் மூதாட்டி உடல் அடக்கம் செய்யப்பட்டது.இதில் 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் சென்னையிலிருந்து வந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில், மூதாட்டியின் கணவர் உட்பட 8 பேருக்கும் கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் துக்க நிகழ்வில் பங்கேற்றவர்கள் உட்பட 100 பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் சுமார் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்து உள்ளார். மூதாட்டி கொரோனாவால் உயிரிழந்ததை அறியாமல் உறவினர்கள் அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொண்டதால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மற்ற செய்திகள்
