வீடியோ காலில் ஆபாசமாக படம் பிடித்து கல்லூரி மாணவிக்கு நடந்த கொடுமை.. தப்பி ஓடிய ராணுவ வீரர்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராணுவ வீரர் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை அடுத்த இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவி ஓய்வு நேரத்தில் மாதச்சீட்டு நடத்தி வந்தார். இதில் அவருக்கு பண நஷ்டம் ஏற்பட்டது. இதனை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் சஜித் (வயது 30) என்பவரிடம் உதவி கேட்டார்.
அந்த நபர் மாணவிக்கு பண உதவி செய்வதாக உறுதி அளித்தார். இதற்காக அடிக்கடி மாணவியுடன் செல்போனில் பேசினார். மாணவியுடன் நெருக்கம் அதிகரித்ததை தொடர்ந்து இருவரும் வாட்ஸ் அப்பிலும் பேசத் தொடங்கினர். அப்போது மாணவியை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு ராணுவ வீரர் சஜித் பேசியுள்ளார்.
அப்போது மாணவியை ஆபாசமாக படம் எடுத்துள்ளார். பின்னர் அந்த படத்தை காட்டி சஜித் மிரட்டி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், மாணவியின் ஆபாச படங்களை சஜித் தனது நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார். அவர்களும் மாணவியை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மாணவி, இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மாணவி கொடுத்த புகாரின் பேரில் ராணுவ வீரர் சஜித், கிரீஷ் (வயது 29 ), ஜான் பிரிட்டோ (வயது 33), லிபின் ஜான் (வயது 32) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஜான் பிரிட்டோ, லிபின் ஜான் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான சஜித் மற்றும் கிரீஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். இருவரும் ராணுவ வீரர்கள் என்பதால் அவர்களை கைது செய்ய தனியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இவர்கள் இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
