'முதல்வன்' பட பாணியில்... 'டூ வீலரில்' ரேஷன் கடை பறந்து... மாஸ் காட்டிய 'மினிஸ்டர்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ரேஷன் கடை பொருட்கள் தரமாக இல்லை என பெண் குற்றம் கூறியதையடுத்து உடனடியாக அமைச்சர் செல்லூர் ராஜு நடவடிக்கை எடுத்த சம்பவம் மக்களின் பாராட்டை பெற்று வருகிறது.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் கட்சி சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்திருந்த பெண் ஒருவர், 'ரேஷன் கடையில் எடை குறைவாகவும், மிகவும் மோசமாகவும் அரிசி வழங்குகிறார்கள். அது மட்டுமில்லாமல் அரிசியில் கற்கள் மற்றும் புழுக்கள் அதிகமுள்ளது. இதுகுறித்து கடையில் உள்ளவரிடம் கேட்டால் அவர் கோபம் கொள்கிறார்' என தெரிவித்து அந்த அரிசியையும் காட்டியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக கட்சிக்காரர் ஒருவரின் வண்டியில் அமைச்சர் செல்லூர் ராஜு ரேஷன் கடை நோக்கி விரைந்தார். அமைச்சர் பைக்கில் செல்வதை சற்றும் எதிர்பாராத காவல்துறையினர் அவரை பின்தொடர்ந்து சென்றார்கள். அமைச்சரின் வருகையை எதிர்பார்க்காத ரேஷன் கடை ஊழியர்களிடம் அந்த பெண்ணை வைத்துக் கொண்டே அமைச்சர் விசாரணையில் ஈடுபட்டார்.
ஊழியரின் பதிலை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர், உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார். அதே வேளையில் ரேஷன் கடையில் சம்மந்தமுமில்லாத நபர் ஒருவரும் இருந்துள்ளார். அவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். அமைச்சரின் அதிரடி மற்றும் பரபரப்பு நடவடிக்கை அனைவரது பாராட்டையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
