சென்னை வந்தடைந்தது கோவிஷீல்டு தடுப்பூசி'...' 'ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் கண்டுபிடிப்பு...' - சென்னையில் பரிசோதனை குறித்த விபரங்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனை முறைக்கு செயல்படுத்த சென்னை வந்தடைந்துள்ளது.

கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவிய காலகட்டம் முதல் பல்வேறு உலக நாடுகள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல கட்ட முயற்சிகளையும், சோதனைகளையும் செய்து வருகிறது.
அவற்றில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கோவிஷீல்டு என்று பெயரிடப்பட்ட கொரோனா தடுப்பூசியைக் கண்டறிந்த சம்பவம் உலகறிந்தது.
தற்போது கோவிஷீல்டு மருந்தினை தமிழகத்தில் பரிசோதனை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் 200 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் தற்போது சென்னை GH-க்கு வந்தடைந்தது. இந்த கோவிஷீல்டு பரிசோதனையானது ICMR மற்றும் DCGI சென்னையை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, போரூர் தனியார் மருத்துவமனையில் ஆரோக்கியமாக இருக்கும் 300 பேருக்கு பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதுள்ளது
அதுமட்டுமில்லாமல் இந்தியா கண்டுபிடித்த கோவாக்சின் மருந்திற்கான பரிசோதனைகளும் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின், கோவிஷீல்டு மருந்து குறித்து கூறிய சுகாதாரஅமைச்சர் விஜயபாஸ்கர், இந்த கோவிஷீல்டு மருந்தானது, மனித உடலில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாகும் என்றும் கொரோனா பாதிக்கப்பட்ட செல்களை 28 நாட்களில் தடுக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

மற்ற செய்திகள்
