'பாடநூல்களில் சாதிப் பெயர்கள் நீக்கம்'... 'அடையாளம் எங்கே'... ராமதாஸ் காட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் முக்கியத் தலைவர்களின் பெயர்களுக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
![Allow caste surnames of eminent scholars to remain in Tamil textbooks Allow caste surnames of eminent scholars to remain in Tamil textbooks](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/allow-caste-surnames-of-eminent-scholars-to-remain-in-tamil-textbooks.jpg)
தமிழ்நாட்டில் அரசு பாடநூல் கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள மற்ற நூல்களிலும், தலைவர்களின் பெயர்களில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதோடு கடந்த மூன்று ஆண்டுகளாகவே, தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்படும் நூல்களில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அண்மையில் தமிழக அரசினால் புதிய பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன. அப்பாடப்புத்தகங்களில் வரலாறு, கவிதைகள், போராட்டங்கள் போன்றவற்றைக் குறிப்பிடும் பகுதிகளில் தலைவர்களின் பெயர்களோடு இடம்பெற்றிருந்த சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
பன்னிரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில், பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் என்ற தலைப்பில் உள்ள பகுதியில், தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதர் என்று மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அவருக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயரைத் தமிழக அரசு நீக்கியுள்ளது. இந்நிலையில் பாடநூல்களில் இடம் பெற்றிருக்கும் தலைவர்களின் பெயர்களில் உள்ள சாதியை நீக்குவது புரிதல் இல்லாத செயல் எனப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும், இத்தகைய நடவடிக்கைகள் சாதிக்குப் பதிலாக அடையாளத்தைத் தான் அழிக்கும் எனக் கூறியுள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)