“நாங்க இந்தியர்கள்.. இந்தியில்தான் பேசுவோம்.. டிவில வேணா...!”.. பிரபல வீரர் அதிரடி! வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Apr 03, 2020 08:37 PM

தொடர்ச்சியாக விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுக் கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தேவையான இடைவெளியை, இந்த கொரோனா கால ஊரடங்கு கொடுத்துள்ளது என சொல்லலாம்.

\'We are Indians and we will talk in Hindi only\' Rohit sharma

இந்த நிலையில், ரோஹித் சர்மா மற்றும் பும்ரா இருவரும் இன்ஸ்டாகிராமில் நேரலை வீடியோக்களை செய்து பதிவிட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியில் விளையாடும் இருவரும் அப்போது ஐபிஎல் போட்டிகளை பற்றி இந்தியில் பேசினர். இதனால் ரசிகர் ஒருவர்  ‘நீங்கள் பேசுவது புரியவில்லை. ஆங்கிலத்தில் பேசினால் எங்களுக்கு புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்த ரோஹித் சர்மா, ‘நாங்கள் இந்தியர்கள். இந்தியில்தான் பேசுவோம். டிவியில் வேண்டுமானால் ஆங்கிலத்தில் பேசுவோம். இங்கு ஆங்கிலத்தில் பேச வேண்டிய அவசியம் இல்லை’ என்று

பேசியுள்ள வீடியோ பரபரப்பாகியுள்ளது.

 

Tags : #CRICKET #ROHITSHARMA