"உங்க வீட்ல யாருங்க நம்பர் 1?.." பர்சனலாக ரசிகர் கேட்ட கேள்வி.. வெட்கத்துடன் பதில் சொன்ன 'தோனி'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Mar 17, 2022 10:02 PM

ஐபிஎல் மெகா ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்திருந்த நிலையில், 15 ஆவது ஐபிஎல் சீசன், மார்ச் 26 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது. இதன் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

ms dhoni cheeky response on fans question about personal

மேலும், ஐபிஎல் தொடர் நெருங்கி வருவதால், அனைத்து ஐபிஎல் அணிகளும் தற்போதே மிகத் தீவிரமாக தயாராகத் தொடங்கியுள்ளனர்.

கடந்த முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறையும் கோப்பையை வென்று சாதனை படைக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக இருக்கிறது.

குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்

சூரத்தில் கடந்த சில நாட்களாக சிஎஸ்கே வீரர்கள், ஆக்ரோஷத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, சிஎஸ்கே அணி தங்களின் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

தீவிர பயிற்சியில் தோனி

அந்த வகையில், சிஎஸ்கே கேப்டன் தோனி, பயிற்சி ஆட்டத்தில், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் என விளாசும் வீடியோக்களும் அதிகம் வைரலாகி வருகிறது. கடந்த சீசனில் பிளே ஆப் போட்டியில் சிறப்பாக ஆடியிருந்த தோனி, லீக் போட்டிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், தன்னுடைய பேட்டிங்கில் பழைய ஃபார்முக்கு வர வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து வருகிறார்.

ms dhoni cheeky response on fans question about personal

ரசிகர் கேட்ட 'Personal' கேள்வி

இந்நிலையில், காணொளி வாயிலாக நிகழ்ச்சி ஒன்றில் தோனி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ரசிகர்கள் சில கேள்விகளை முன் வைத்திருந்தனர். இதில் ரசிகர் ஒருவரின் தனிப்பட்ட கேள்வி தான் ஹைலைட் விஷயமாக மாறியுள்ளது.

தோனியிடம், "நான் உங்களிடம் பர்ஷ்னல் கேள்விகளை கேட்கலாமா?" என அந்த ரசிகர் கேட்கிறார். இதற்கு பதிலளித்த தோனி, "நீங்கள் கேளுங்கள். ஆனால், அதற்கு பதிலளிக்கலாமா வேண்டாமா என நான் முடிவு செய்கிறேன்" என சிரித்துக் கொண்டே கூறினார்.

சிரித்தபடி தோனி சொன்ன பதில்

தொடர்ந்து, சிரித்துக் கொண்டே கேள்வி கேட்ட அந்த ரசிகர், "களத்தில் நீங்கள் தான் நம்பர் 1 என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் உங்கள் வீட்டில் யார் நம்பர் 1?" என கேட்டார். இதற்கு சிரித்து கொண்டே பதில் சொன்ன தோனி, "அரங்கில் இருக்கும் அனைவருக்குமே தெரியும், எல்லோருடைய வீட்டிலும் மனைவி தான் நம்பர் 1" என பதிலளித்தார்.

ms dhoni cheeky response on fans question about personal

வைரலாகும் வீடியோ

இது தொடர்பான வீடியோக்கள், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. மகளிர் தினத்தன்று சிஎஸ்கே வெளியிட வீடியோ ஒன்றில் பேசிய தோனியின் மனைவி சாக்ஷி, கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவியாக இருப்பதால், பொது இடங்களில் பிரைவசி இல்லை என்றும், கிரிக்கெட் வீரரின் மனைவியாக இருப்பது கஷ்டம் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags : #CHENNAI-SUPER-KINGS #MS DHONI #SAKSHI DHONI #IPL 2022 #CSK #CSK VS KKR #FANS QUESTION #சாக்ஷி #தோனி #மனைவி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ms dhoni cheeky response on fans question about personal | Sports News.