கல்லீரலில் ‘ஆட்டோகிராஃப்’ போட்ட டாக்டர்.. மிரண்டு போன நோயாளி.. எப்படி இதை பண்ணார்..? அதிர்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆபரேஷன் செய்யும் போது நோயாளியின் கல்லீரலில் மருத்துவர் ஒருவர் தனது ஆட்டோகிராஃப்பை பாதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் கல்லீரல் பிரிவில் 12 ஆண்டுகளாக பிரம்ஹால் (வயது 57) என்பவர் மருத்துவராகப் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு அந்த மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு மருத்துவர் பிரம்ஹால் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனை அடுத்து அந்த நோயாளி கல்லீரலில் ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் ஒரு இனிஷியல் பொறிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.
மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்ட விசாரணையில் பிரம்ஹால் தான் இந்த செயலில் ஈடுபட்டது என்பது தெரியவந்துள்ளது. இதனை மருத்துவர் பிரம்ஹாலும் ஒப்புக்கொண்டுள்ளார். Argon Beam machine எனப்படும் இயந்திரத்தை பயன்படுத்தி இந்த இனிஷியலை நோயாளியின் கல்லீரலில் பதித்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த செயலுக்காக அவர் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து 2014-ம் ஆண்டு அவர் தனது மருத்துவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ தீர்ப்பாயத்தில் இதுகுறித்து புகார் அளித்தது. அதில் மருத்துவர் பிரம்ஹாலை 5 மாதங்கள் சஸ்பெண்ட் செய்தும் 10 ஆயிரம் பவுண்டுகள் அபராதம் விதித்ததும் மருத்துவ தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்த தண்டனை அவருக்கு போதாது என உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரம்ஹாலின் மருத்துவ அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இவரின் செயல் மருத்துவத் துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை கெடுப்பதாக உள்ளது என நீதிபதி தெரிவித்துள்ளார். பிரம்ஹால் செய்த இந்த செயலால் உடல் ரீதியாக எந்த நோயாளிக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.