அடங்காதவன்டா… புஷ்பா ஸ்டைலில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை தெறிக்க விட்ட வார்னர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மைதானத்தில் புஷ்பா அல்லு அர்ஜுன் போல செய்தது கவனத்தை ஈர்த்துள்ளது.

பாகிஸ்தானில் ஆஸ்திரேலிய அணி
கிரிக்கெட் உலகில் பல வருடங்களாக கோலோச்சி வரும் அணிகளில் ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் முன்னணியில் உள்ளவை. இரு அணிகளுமே சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கி கிரிக்கெட் உலகுக்கு அளித்தவை. அதே போல இரு நாட்டு அணி வீரர்களும் களத்தில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்கள். இந்நிலையில் நாளை பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானத்தில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளன. பாகிஸ்தான் மண்ணில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும் முதல் தொடர் இதுவாகும்.
டிராவில் முடிந்த போட்டி
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய அந்த போட்டி இப்போது ட்ராவில் முடிந்துள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 476 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது, அதன் பின்னர் ஆடிய ஆஸி 459 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய பாக் 252 ரன்கள் சேர்த்த நிலையில் 5 நாள் ஆட்டமும் முடிந்ததால் போட்டி டிராவில் முடிந்தது. ஆனால் போட்டியில் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளன.
பாகிஸ்தான் வரை சென்ற புஷ்பா
அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் சுகுமார் இயக்கிய 'புஷ்பா: தி ரைஸ்' படம் கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியானது. ஆந்திர பிரதேச காடுகாளில் செம்மரக் கடத்தல் செய்யும் புஷ்பராஜ் என்கிற கேரக்டரை மையமாகக் கொண்ட இந்த படத்தில் அல்லு அர்ஜூன் புஷ்பராஜாக நடித்திருந்தார். குறிப்பாக படத்தின் ஓரிடத்தில், ‘புஷ்பா என்றால் ஃப்ளவர் இல்லை, ஃபயர்’ என அல்லு அர்ஜூன் பேசும் மாஸ் வசனம் மற்றும் அடங்காதவன் என சொல்லி அவர் செய்யும் மேனரிசம் வைரலானது. அல்லு அர்ஜுன் போலவே பல ரசிகர்களும் செய்து வீடியோக்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். ரசிகர்கள் மட்டுமில்லாமல் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் அதுபோல வீடியோ செய்து பகிர்ந்து வந்தனர்.
டேவிட் வார்னரின் கலக்கல் டான்ஸ்
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் பிரபல வீரரான வார்னர் திரைப்பட பாடல்களுக்கு, குறிப்பாக இந்திய பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடி சமூகவலைதளங்களில் பகிர்ந்து இந்திய ரசிகர்களை ஈர்த்து வருகிறார். ஏற்கனவே விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து வாத்தி கம்மிங் உள்பட பல தமிழ் பாடல்களின் ஸ்டெப்ஸ்களை போட்டு அசத்தியவர். அவர் மட்டும் இல்லாமல் அவரின் குடும்பத்தோடு சேர்ந்து இதுபோல பாடல்களுக்கு ஆடி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறார்.
புஷ்பா பாடலுக்கு நடனம்
அப்படி அவர் புஷ்பா படத்தின் ஸ்ரீவள்ளி பாடலில் வரும் சிக்னேச்சர் ஸ்டெப்ப்பை ஆடி கவனத்தை ஈர்த்தார். அதுபோலவே அடங்காதவன் மேனரிசத்தையும் செய்து கலக்கினர். இதனை பார்த்த ரசிகர்கள் வார்னரின் வீடியோக்களை பாராட்டி ஊக்கப்படுத்தி வருகின்றனர். வார்னரின் மூலமாக இப்போது புஷ்பா பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. பாகிஸ்தானில் இப்போது நடந்து வரும் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் வார்னர் ஃபீல்ல்டிங் செய்யும் போது ரசிகர்கள் கேட்டதற்காக புஷ்பா மேனரிசத்தை செய்துகாட்டியுள்ளார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

மற்ற செய்திகள்
