‘அவர் மட்டும் டீமுக்கு திரும்பட்டும், அப்புறம் நடக்குற கதையே வேற’!.. பிரபல நடிகரின் வைரல் ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அணிக்கு திரும்பினால் சிறப்பாக இருக்கும் என பாலிவுட் நடிகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகள் டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.
இதுவரை நடந்து முடிந்த 3 டி20 போட்டிகள் 2-ல் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டி20 போட்டி இன்று (18.03.2021) அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஒருவேளை இந்திய அணி தோல்வி அடைந்தால் தொடரை இழக்க வாய்ப்பு உள்ளது. அதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற இந்தியா முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா குறித்து பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘பும்ராவின் வருகைக்காக காத்துள்ளோம். அவர் வந்தால் கதையே வேறு’ என ரன்வீர் சிங் ட்வீட் செய்துள்ளார்.
Koi naa.
Just wait till @Jaspritbumrah93 returns.... It will be a different story.
🏏🇮🇳🤜🏽🤛🏽💥 #INDvENG
— Ranveer Singh (@RanveerOfficial) March 16, 2021
சமீபத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேசனுக்கும், பும்ராவுக்கு கோவாவில் வைத்து திருமணம் நடைபெற்றது. அதனால்தான் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் பும்ரா விளையாடவில்லை. தற்போது அவர் விடுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
