“தம்பி பெட்ல தோத்துட்டீங்க.. ஃப்ரீ டின்னர் வாங்கி கொடுத்துடுங்க”.. SRH வலைப்பயிற்சியில் நடந்த ருசிகரம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஹைதராபாத் அணியின் வலைப் பயிற்சியின்போது இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிடம் நிக்கோலஸ் பூரன் பெட் கட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 15-வது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் 5-வது லீக் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 55 ரன்களும், தேவ்தத் படிக்கல் 41 ரன்களும், ஜாஸ் பட்லர் 35 ரன்களும், ஹெட்மையர் 32 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிக்கு செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஹைதராபாத் அணியின் ஐடன் மார்க்ராம் 52 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 40 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை சஹால் 3 விக்கெட்டுகளும், டிரென்ட் போல்ட் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இந்த நிலையில் இப்போட்டிக்கு முன்பாக ஹைதராபாத் அணி வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிடம் யாக்கர் பந்து வீசுமாறு நிக்கோலஸ் பூரன் பெட் கட்டினார். ஆனால் உம்ரான் மாலிக் வீசிய பந்து ஃபுல் டாஸாக சென்றது. அதனால் இரவு டின்னர் இலவசமாக வாங்கித் தருவதாக நிக்கோலஸ் பூரனிடம் உம்ரான் மாலிக் நகைச்சுவையாக கூறினார். இந்த வீடியோவை ஹைதராபாத் அணி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.