கேப்டன் பதவி வந்ததும் பேட்டிங்கில் தடுமாறும் ஜடேஜா.. அதுக்கு காரணம் இதுதான்.. முன்னாள் வீரர் பரபர கருத்து..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே கேப்டனாக மாரியப்பன் ஜடேஜா தடுமாற காரணம் குறிப்பு முகமது கைப் பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி கடந்த சனிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் தோனி 50 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 18.3 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகினார். இதனை அடுத்து அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கமாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஜடேஜா, கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் லீக் போட்டியில் சற்று நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். 28 பந்துகளை எதிர்கொண்ட அவர் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘ஜடேஜா பேட்டிங்கில் சமீபகாலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் கேப்டன் பதவி ஏற்றதும், முதல் போட்டியிலேயே அவரது பேட்டிங் மந்தமாக மாறியது. அதற்கு காரணம், அவர் மீது கேப்டன் பொறுப்பு இருந்ததனால்தான் பதட்டமாக காணப்பட்டார். கேப்டன் பதவி எனும் கூடுதல் அழுத்தம் காரணமாகவே அவரால் பழைய ஆட்டத்தை தர முடியவில்லை. இனி வரும் போட்டிகளில் பழையபடி இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கிறேன்’ என முகமது கைப் கருத்து தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
