‘அப்படி போடு’.. சிஎஸ்கே அணியில் இணைந்த ‘ஸ்டார்’ ப்ளேயர்.. அப்போ இனி ஆட்டம் வேறலெவல்ல இருக்குமே..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் அணியில் இணைந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 லிக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. கடந்த சனிக்கிழமை நடந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
இதனை அடுத்து வரும் 31-ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாட உள்ளது. இதனிடையே சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி விசா பிரச்சனை காரணமாக இந்தியா வர தாமதமானது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு மும்பை வந்த அவர் மூன்று நாட்கள் தனிமைப்படுத்த தொழில் முடிந்தபின் சிஎஸ்கே அணியுடன் இணைந்துள்ளார் இந்த வீடியோவை சிஎஸ்கே தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது.
Vanganna Vanakkangana! 🙏🏻
A Superfam welcome to Namma Mo Bhai! 🦁💛#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/Y9L5tqES7r
— Chennai Super Kings (@ChennaiIPL) March 28, 2022
கடந்த ஐபிஎல் தொடரில் மொயின் அலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பல முக்கியமான போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிஎஸ்கே அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். அதனால் ஐபிஎல் ஏலத்துக்கு முன்பே சிஎஸ்கே அணி இவரை தக்க வைத்தது. தற்போது மொயின் அலி சிஎஸ்கே அணியுடன் இணைந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
