“தோத்திருந்தா கூட இந்த அளவுக்கு வலிச்சிருக்காது”.. அண்ணனை கலாய்த்த ஹர்திக் பாண்ட்யா.. ஏன் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகுஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தனது அண்ணன் க்ருணால் பாண்ட்யாவின் ஓவரில் அவுட் ஆனது குறித்து நகைச்சுவையாக பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 4-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மும்பை அணியில் விளையாடி வந்த ஹர்திக் பாண்ட்யாவை ஏலத்திற்கு முன்பே குஜராத் அணி வாங்கியது. மேலும் அந்த அணிக்கு கேப்டனாகவும் அவரை நியமித்தது. அதேபோல் ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் க்ருணால் பாண்ட்யா லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
இந்த சூழலில் நேற்றைய ஆட்டத்தின்போது க்ருணால் பாண்ட்யா வீசிய ஓவரில் மணிஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து ஹர்திக் பாண்ட்யா அவுட்டானார். இதுகுறித்து போட்டி முடிந்த பின் பேசிய ஹர்திக் பாண்ட்யா, ‘க்ருணால் பாண்ட்யாவின் ஓவரில் அவுட்டானது கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. நாங்கள் போட்டியில் தோற்றால் கூட இந்த அளவிற்கு என்னை பாதித்திருக்காது. ஆனாலும் அவர் என்னுடைய விக்கெட்டை எடுத்தார், நாங்கள் போட்டியில் வெற்றி பெற்றோம். எல்லாம் சரிக்கு சமமாக முடிந்தது’ என நகைச்சுவையாக ஹர்திக் பாண்ட்யா கூறினார்.

மற்ற செய்திகள்
