"கழுத்த அறுக்கப் போறேனு சொன்னாரு!"... "6 பந்தில் 6 சிக்ஸர் அடிச்சப்ப கோவமா இருந்தேன்!".. மனம் திறந்த யுவராஜ் சிங்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடக்கவில்லை என்றாலும், பழைய சுவாரஸ்யமான ஆட்டங்களை வீரர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
கடந்த 2007ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரின்போது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் தொடர்ந்து 6 சிக்ஸர்கள் அடித்து யுவராஜ் சிங் படைத்த சாதனையை இந்திய கிரிக்கெட் வரலாறு அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது.
இந்த ஓவருக்கு முந்தைய ஓவரை வீசிய ஃபிளிண்டாஃப்க்கும் தனக்குமான காரசாரமான விவாதத்தை பற்றி தற்போது யுவராஜ் சிங் பகிர்ந்துள்ளார். அதில், “ஃபிளிண்டாஃப் முதல் 2 பந்துகளை சிறப்பாக வீசினார் என நினைக்கிறேன். ஆனால் அடுத்த பந்தை யாக்கராக வீசியபோது நான் அதை பவுண்டரிக்கு விரட்ட, என்னிடம் டேஷ் ஷாட் என்று கூறி ஃபிளிண்டாஃப் பேச்சைத் தொடர்ந்தார். அப்போது அவர் என்னிடம் உன்னோட கழுத்தை அறுக்கப் போகிறேன் என்று சொன்னார். நானோ என் கையில் இருக்கும் பேட்டை பாருங்கள், உங்கள் பந்தை இந்த பேட்டால் எந்த பக்கம் அடிக்கப் போகிறேன் என நீங்கள் அறிவீர்களா? என்றேன்.
இதற்கு அடுத்த ஓவர்தான் ஸ்டூவர்ட் பிராட் பந்தை வீச, அப்போது கோபமாக இருந்த நான் 6 சிக்ஸர்கள் அடித்தேன். ஆம், அப்போது நான் கோபமாக இருந்தேன். பந்துகளை விளாசிய பின்னர் டிமிட்ரி மாஸ்கரனேஸ், ஃபிளிண்டாஃப் இருவரையும் பார்த்தேன். மாஸ்கரேனஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் என்னுடைய 5 பந்துகளில் சிக்ஸ் அடித்தார். அதனால்தான் அவரை முதலிலும் அடுத்ததாக ஃபிளிண்டாஃபையும் பார்த்தேன். இந்த போட்டி மறக்க முடியாதது. எங்கள் எல்லாரின் நினைவிலும் எப்போதும் இருக்கக் கூடியது” என்று கூறியுள்ளார்.