'என்னமோ பெருசா பேசுனீங்க'... 'தோனிக்கு பிறகு இவர் தான்னு'... 'இப்ப அவரு என்ன வேலை பாக்குறாருன்னு தெரியுமா'?... சாடிய பிரபல வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனிக்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்ட ரிஷப் பன்ட், தற்போது என்ன நிலையில் வைக்கப்பட்டுள்ளார் எனப் பிரபல முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா, கடுமையாகச் சாடியுள்ளார்.
![Ashish Nehra has slammed BCCI over Rishabh Pant\'s ouster Ashish Nehra has slammed BCCI over Rishabh Pant\'s ouster](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/ashish-nehra-has-slammed-bcci-over-rishabh-pants-ouster.jpg)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பின்பு எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. அவர் ஓய்வு பெறப் போகிறார் எனப் பலரும் கூறி வந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவர், அதன் அடிப்படையில் அவர், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவார், என ஒரு சாரார் கருத்து தெரிவித்து வந்தார்கள். ஆனால் கொரோனா வைரஸினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக, தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த தேர்வுக்குழு தலைவர், எம்.எஸ்.கே. பிரசாத், ''உலகக்கோப்பை போட்டிகள் முடிந்ததும் தோனியோடு நாங்கள் ஆலோசனை நடத்தினோம். அப்போது கிரிக்கெட்டிலிருந்து அவர் சிறிது காலம் விலகி இருக்க விரும்புவதாகக் கூறினார். இதனால் ரிஷப் பன்ட்டை அணியில் சேர்த்தோம். இப்போது வரை அவர் அணியில் இருக்கிறார்'',என பிரசாத் கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் ஆஷிஸ் நெஹ்ராவும் இந்த விவகாரம் குறித்து தற்போது பேசியுள்ளார். அதில் ''இந்திய அணியில் திறமையான வீரர்களுக்கு அதிகமான ஆதரவு தேவைப்படுகிறது. தோனிக்கு மாற்றாகக் களமிறக்கப்பட்ட இளம் வீரர் ரிஷப் பன்ட் சக வீரர்களுக்குத் தண்ணீர் கொடுக்கும் வேலையைச் செய்து கொண்டு இருக்கிறார், என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
அவர் தனக்குக் கொடுத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது உண்மை தான். ஆனால் எதற்காக அவரை அணியில் எடுத்தார்கள், 22 வயதிலேயே அவரிடம் இருக்கும் திறமையைக் கண்டு கொண்டதினால் தான்'' என நறுக்காகப் பதில் அளித்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)