Kadaisi Vivasayi Others

"செம பிளேயர் அவரு.. 'அரசியல்' பண்ணியே டீம்'ல இருந்து காலி பண்ணிட்டீங்க.." 'இந்திய' அணி பற்றிய புகாரால் பரபரப்பு

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Feb 10, 2022 10:53 PM

இந்திய கிரிக்கெட் அணியில், தற்போது அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விக்கெட் கீப்பராக தொடர்ந்து செயல்பட்டு வருபவர் இளம் வீரர் ரிஷப் பண்ட்.

syed kirmani praises wriddhiman saha for his performance

ஒரு சமயத்தில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக தோனி செயல்பட்டு வந்ததால், மற்ற விக்கெட் கீப்பர்கள் யாருக்கும் பெரிய அளவிலான வாய்ப்புகள், இந்திய அணியில் கிடைக்கவில்லை.

தொடர்ந்து, தோனியும் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு முடிவை அறிவிக்க, இளம் வீரர் ரிஷப் பண்ட்டிற்கு, அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது.

வெயிட்டிங்கில் சீனியர் வீரர்

அதிரடியுடன் ஆடும் இளம் வீரர் பண்ட், தொடர்ந்து அனைத்து தொடர்களிலும் இடம் பிடித்து வரும் நிலையில், இந்திய அணியின் சீனியர் விக்கெட் கீப்பர் சஹாவிற்கு, இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதே அரிதாகி விட்டது. இரண்டாவது விக்கெட் கீப்பராகவே சஹா இந்திய டெஸ்ட் அணியில் இருக்கும் நிலையில், இலங்கை அணிக்கு எதிராக, டெஸ்ட் தொடர் ஒன்றில் இந்திய அணி மோதவுள்ளதால், அந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் சஹா உள்ளார். இதற்காக, அவர் ரஞ்சி தொடரிலும் கலந்து கொள்ளாமல் விலகியுள்ளார்.

பரபரப்பு தகவல்

இது ஒரு புறம் இருக்க, இனி வரும் போட்டிகளில், சஹா உள்ளிட்ட சீனியர் வீரர்களை அதிகம் பயன்படுத்தாமல் இந்திய அணி ஒதுக்க போவதாகவும் ஒரு தகவல்கள் பரவி, பரபரப்பை உண்டு பண்ணியது. அதே போல, சஹாவும் ஓய்வினை அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால், இதனை அவர் மறுத்திருந்தார்.

சஹாவிற்கு ஆதரவு

சிறந்த கீப்பர் என்று பெயர் எடுத்த போதும், அணியில் இடம் கிடைக்காததால், பலரும் விக்கெட் கீப்பர் சஹா குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி, சஹாவுக்கு ஆதரவாக சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

சிறப்பான விக்கெட் கீப்பர்

'விரித்திமான் சஹா தான் சிறந்த விக்கெட் கீப்பர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், ரிஷப் பண்ட்டின் அதிரடி பேட்டிங்கால் அவர் தொடர்ந்து, இந்திய அணியில் இடம் பிடித்து வருகிறார். 37 வயதிலும், சஹா தான் சிறந்த கீப்பர். அவர் மனம் தளர்ந்து போகக் கூடாது. இந்திய அணிக்காக, கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

அரசியலால் புறக்கணிப்பு

சஹா எந்த ஒரு குறிப்பிட்ட குரூப்பை சேர்ந்தவர் இல்லை என்பதால், அணியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட்டின் அரசியலால், நீங்கள் கை விடப்பட்டீர்கள். நான் எப்போதும் உங்களை சிறந்த விக்கெட் கீப்பராக நினைவில் கொள்வேன்' என சையது கிர்மானி தெரிவித்துள்ளார்.

எந்த குழுவையும் சார்ந்தவர் சஹா இல்லை என்பதாலும், இந்திய அணியின் அரசியல் காரணமாகவும் தான், சஹா இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு விட்டதாக, முன்னாள் வீரர் தெரிவித்துள்ள கருத்து, கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #RISHABHPANT #WRIDDHIMAN SAHA #SYED KIRMANI #ரிஷப் பண்ட் #விரித்திமான் சஹா #சையது கிர்மானி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Syed kirmani praises wriddhiman saha for his performance | Sports News.