மீண்டும் உடல் நிலை தேறி பிரபல கேம் ஆடும் ரிஷப் பண்ட்.. வைரலாகும் போட்டோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக வலம் வருபவர் ரிஷப் பண்ட்.

இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், பல்வேறு போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார்
டெஸ்ட், டி 20 மற்றும் ஒரு நாள் போட்டி என அனைத்திலும் சிறந்து விளங்கி வரும் ரிஷப் பண்ட், ஐபிஎல் தொடரிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்
இதனிடையே கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே பண்ட், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்தின் காரணமாக அவருக்கு முழங்காலில் தசைநார் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனால் பண்ட் மீண்டும் இந்திய அணியில் இணைய மாதக்கணக்கில் காலம் ஆகலாம் என கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பண்ட் வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என அணி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்திய அணியின் தலைச்சிறந்த இளம் வீரராக வலம் வந்த ரிஷப் பண்ட், திடீரென விபத்தில் சிக்கி இருந்தது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதே போல, விரைவில் அவர் மீண்டு கிரிக்கெட் ஆட வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
சமீபத்தில் ரிசப் பண்ட் தனது முகநூல் பக்கத்தில் விபத்துக்கு பிறகு தான் தேறி வரும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். ரிசப் பண்ட், உடல் நலம் தேறி வரும் நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சதுரங்கம் ஆடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் என்னுடன் சதுரங்கம் ஆடும் சக வீரர் யார் என்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பி உள்ளார்.

மற்ற செய்திகள்
