குழந்தைங்க கூட அடிக்கடி 'டயப்பரை' மாத்திக்கிட்டு இருக்காது...! 'பஞ்சாப் அணியை பங்கம் செய்த முன்னாள் வீரர்...' 'இவருக்கு இதே வேலையா போச்சு...' - கொந்தளிக்கும் ரசிகர்கள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Sep 22, 2021 12:03 PM

நேற்று (21-09-2021) ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Sehwag\'s viral sarcastic tweet on Punjab Kings storms internet

நேற்று நடைபெற்ற ஐபில் போட்டி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மிக முக்கிய போட்டி ஆகும். இந்த 14-வது சீசனில் இதுவரை பஞ்சாப் விளையாடிய 8 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

Sehwag's viral sarcastic tweet on Punjab Kings storms internet

அதோடு மட்டுமல்லாமல், பஞ்சாப் அணியின் இந்த தோல்விகளுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது பஞ்சாப் அணியின் ப்ளேயிங்-11 அடிக்கடி மாற்றப்படுவது தான் என கூறப்படுகிறது. பஞ்சாப் அணியின் இந்த போட்டியிலும் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தது.

Sehwag's viral sarcastic tweet on Punjab Kings storms internet

டாப் ஆர்டரில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயிலே இந்த தொடரில் சேர்க்கப்படவில்லை. அதோடு சிறப்பாக பந்துவீசி வந்த ரவி பிஷ்னாயும் ப்ளேயிங் 11ல் இருந்து நீக்கப்பட்டு, இஷான் பொரோல் என்ற அறிமுக வீரரை இக்கட்டான நிலையில் சோதனை செய்து வருகிறது பஞ்சாப் அணி.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் ஐபில் கிரிக்கெட் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணியை குறித்து மிக மோசமான முறையில் விமர்சித்துள்ள ட்வீட் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Sehwag's viral sarcastic tweet on Punjab Kings storms internet

இந்திய கிரிக்கெட் அணி எந்த கிரிக்கெட் தொடர் விளையாடினாலும் சரி அதற்கு முன்னரே சேவாக் அவர்களின் ட்வீட் இணையத்தில் வைரலாகி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும்.

அதுபோன்று, தற்போது நடந்து வரும் 2021-ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபில் கிரிக்கெட் தொடரில் இதற்கு முன்னரே பல சர்ச்சைக்குரிய கிண்டலான பல ட்விட்டர் பதிவுகளை பதிவிட்டு ரசிகர்களிடம் பல அறிவுரைகளையும் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தைக் குறித்து, 'குழந்தைகள் கூட தங்களது 'டயப்பரை' அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்காது. ஆனால் இந்த பஞ்சாப் கிங்ஸ் அணி ஒவ்வொரு போட்டியிலும் ப்ளேயிங் 11- ஐ மாற்றி வருகிறது' எனக் கூறியுள்ளார்.

சேவாக் அவர்களின் இந்த கிண்டலான ட்வீட் இணையத்தில் வைரலாகி வருவத்தோடு பஞ்சாப் அணியின் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sehwag's viral sarcastic tweet on Punjab Kings storms internet | Sports News.