VIDEO: இதனாலதான் எல்லாருக்கும் இந்த மனுசன பிடிக்குதோ..! வைரலாகும் ‘வார்னர்’ வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரும், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடியும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது நின்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
![David Warner, Shaheen Afridi face off photo goes viral David Warner, Shaheen Afridi face off photo goes viral](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/david-warner-shaheen-afridi-face-off-photo-goes-viral-1.jpg)
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்தது. இந்த சூழலில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லாகூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 134 ரன்களுடன் 2-வது இன்னிங்சில் முன்னிலை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மற்றும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவதற்கு ஒரே ஒரு பந்து மட்டுமே எஞ்சி இருந்தது. அந்த ஓவரின் கடைசி பந்தை பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி வீசினார். அதை ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் எதிர்கொண்டார். பவுன்சராக வந்த பந்தை டிஃபன்ஸ் ஆடி வார்னர் தடுத்தார். உடனே மறுமுனையிலிருந்து உஸ்மான் கவாஜா சிங்கிள் ஓட வந்திடுவரை, வார்னர் வேண்டாம் எனத் தடுத்து விட்டார்.
What a way to conclude the day 😄 #BoysReadyHain l #PAKvAUS pic.twitter.com/FafG8lkVTT
— Pakistan Cricket (@TheRealPCB) March 23, 2022
அப்போது வேகமாக ஓடிவந்த ஷாகின் அப்ரிடி, வார்னருக்கு முகத்து நேராக நின்று பார்த்து சிரித்து விட்டு செல்றார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இருவரும் நேருக்கு நேராக இருக்கும் புகைப்படத்தை மீம்ஸ் செய்து நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)