‘வாழ்க்கைல இத மட்டும் பண்ணவேகூடாது! அப்பா கூறிய அறிவுரை’.. நெகிழும் சச்சின்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Arunachalam | May 27, 2019 06:05 PM
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் தன் மகனுக்கு சில அறிவுரைகளை கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தன் மகனுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில், ‘வாழ்க்கையில் குறுக்கு வழியை தேர்வு செய்து விடக் கூடாது என சச்சின் டெண்டுல்கர் அறிவுரை கூறியுள்ளார்.
இந்நிலையில், சச்சின் தனது மகன் அர்ஜூனின் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான டெண்டுல்கர் பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கிரிக்கெட் விளையாடியே ஆக வேண்டும் என்று தனது மகனை வற்புறுத்தியதில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் குறுக்கு வழியை மட்டும் தேர்வு செய்து விடக் கூடாது என தனது தந்தை தனக்குஅறிவுரை சொன்னதாகவும், அதே அறிவுரையை தற்போது தனது மகனுக்கு வழங்கி இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து, கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற பலன் கிடைத்தே தீரும் என்று தன் மகனிடம் கூறி இருப்பதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார்.
