“சச்சின்... சச்சின்... சச்சின்னு”...முதல்ல கோஷமிட்டது யார் தெரியுமா?... மனம் திறக்கும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Arunachalam | May 10, 2019 04:40 PM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ரகசியங்கள் பற்றி மனம் திறந்து கூறிய்யுள்ளார்.

sachin reveals the truth how the chant sachin sachin was started

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவான் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது சிறுவயது சம்பவங்கள் குறித்தும், தனது ரசிகர்கள் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

சச்சின் சிறுவயதில் தான் விளையாடும் போது தன்னை ஊக்குவிக்க தனது தாயார் தான் முதன் முதலில் “சச்சின் சச்சின்” என்று கூறி என்னை ஊக்குவித்தார். அப்போது, அதை கேட்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். மேலும், எனக்குள் ஒரு உத்வேகம் வரும் என்று கூறியுள்ளார்.

மேலும், இதேபோல் “சச்சின் சச்சின்” என்ற வார்த்தைகள் இந்த நாள் வரையில் நான் எங்கு சென்றாலும் ஒலிக்க காரணம் எனது ரசிகர்கள் என் மீது கொண்ட அன்பு தான் மிக முக்கிய காரணம் என்றும் அவர்களால் தான் என்னால் மேலும் பல வெற்றிகளை பெற முடிந்தது என்று நெகிழ்ச்சியடைகிறார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்.

Tags : #SACHIN TENDULKAR