குடும்பமே இடிந்து விழுந்த சோகத்தில்... ஆனாலும் அசராத அரைசதம்! .. அதன் பின் வீரர் செய்த காரியம்.. பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா வீரர் நிதிஷ் ராணா, தான் அடித்த அரைசதத்தை தன் மாமனாருக்கு அர்ப்பணித்தார். அரைசதம் அடித்த உடன் மாமனார் பெயர் பதிக்கப்பட்ட ஜெர்சியை காட்டினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 2020 ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடிவரும் கொல்கத்தா அணியின் முக்கிய வீரரான நிதிஷ் ராணாவின் மாமனார் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன் மரணம் அடைந்தார். ஆனால் நிதிஷ் ராணா இந்தியா சென்று திரும்புவது கடினமான காரியம். இந்த நிலையில் எப்போதும் மூன்றாம் அல்லது நான்காம் வரிசையில் பேட்டிங் செய்யும் அவர் டெல்லி போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி, சுனில் நரைனுடன் சேர்ந்து 100 ரன்களுக்கும் மேல் ரன் குவித்தார். பின்னர் அரைசதம் அடித்த போது தன் மாமனார் பெயர் பொறித்த ஜெர்சியை தூக்கிக் காட்டி அசைத்தார்.
அதாவது தன் அரைசதத்தை தன் மாமனாருக்கு அர்ப்பணிப்பதாக அவர் அந்த செயலை செய்தார். குடும்பத்தில் ஒருவரை இழந்த போதும் மனம் தளராமல் ஆடி அரைசதம் அடித்ததை சக கொல்கத்தா அணி வீரர்களும், சச்சின் டெண்டுல்கரும் பாராட்டினர்.
Loss of a loved one hurts, but what’s more heartbreaking is when one doesn’t get to say a final goodbye. Praying for @mandeeps12, @NitishRana_27 and their families to heal from this tragedy. Hats off for turning up today. Well played.
— Sachin Tendulkar (@sachin_rt) October 24, 2020
குறிப்பாக ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் அவரது மனைவி எழுந்து நின்று கைதட்டி ராணாவை பாராட்டினர். இப்போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 194 ரன்கள் குவித்தது. டெல்லி அணி 135 ரன்களில் சுருண்டதை அடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது.