"இது எல்லாம் நியாயமா கேப்டன்?.." சீரியஸா போயிட்டு இருந்த மேட்ச்.. நடுவில் வேடிக்கை காட்டிய ரோஹித்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியையும், இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
முன்னதாக, 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றி, இலங்கை அணியை வொயிட் வாஷ் செய்திருந்தது.
தொடர்ந்து, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், மீண்டும் ஒரு முறை இலங்கை அணியை இந்திய அணி வொயிட் வாஷ் செய்துள்ளது.
கடின இலக்கு
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 252 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 109 ரன்களில் ஆல் அவுட்டானது. பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்த இந்திய அணி டிக்ளேர் செய்யவே, 447 என்னும் கடின இலக்கு, இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
மீண்டும் 'வொயிட் வாஷ்'
இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், இலங்கை அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 208 ரன்களில் அவர்கள் ஆல் அவுட்டாக, இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை சொந்தமாக்கி அசத்தியது.
கேப்டன் ரோஹித்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் ஷர்மாவின் தலைமையில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட இன்னும் தோல்வி அடையவில்லை. மூன்று வடிவிலான போட்டிகளிலும் தொடர்ந்து தனது கேப்டன் திறமையைக் காட்டி ரோஹித் ஷர்மா அசத்தி வருகிறார்.
குறும்புத்தனம்
இதனிடையே, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியின் செய்த குறும்புத்தனம் தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ஜடேஜா வீசிய பந்தினை சில்வா எதிர்கொண்ட போது, அவரது பேடில் பந்து பட்டது. உடனடியாக இந்திய வீரார்கள் அவுட் என அப்பீல் செய்தனர்.
ஆனால், நடுவாரோ அவுட் கொடுக்க மறுத்து விட்டார். இதனால், இந்திய அணி வீரர்கள் சிறிதாக ஏமாற்றம் அடைந்தனர். அப்போது, கேப்டன் ரோஹித் ஷர்மா டிஆர்எஸ் கேட்பது போல சென்று, கையைத் தூக்கினார். ஆனால், டிஆர்எஸ் கேட்காமல், அப்படியே திரும்பி நடந்து சென்றார்.
வைரலாகும் வீடியோ
கேப்டனான பிறகு, ரோஹித் எடுத்துள்ள டிஆர்எஸ் முடிவுகள், பலமுறை இந்திய அணிக்கு வெற்றியையே தேடிக் கொடுத்துள்ளது. இதனையடுத்து, இலங்கை வீரர் அவுட்டில்லை என்பது தெரிந்தும், டிஆர்எஸ் கேட்பது போல பாவனை செய்து, பிறகு கேட்காமல், ரோஹித் நடந்து சென்றது தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
கேப்டனாக இருக்கும் ரோஹித் ஷர்மா, பல முறை வீரர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொண்டுள்ளார். ஆனால், இன்னொரு பக்கம் இப்படி ஜாலியாகவும் போட்டியின் போது ஈடுபடுவது ரோஹித் ஷர்மாவின் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.