யாராவது அவரோட ஜெர்சியில 'நெஞ்சுப்பக்கம்' கவனிச்சீங்களா...? முக்கியமான 'விஷயத்தை' மறைத்து விளையாடிய ரிஷப்...! எதுக்காக 'அப்படி' பண்ணினார்...?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா நியூசிலாந்து கிரிக்கெட் தொடரில் ரிஷப் பண்ட் தனது உடையில் டேப் ஒட்டி வைத்திருந்தது ஏன் என்ற காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இந்திய அணியோடு டி-20 ஓவர் கிரிக்கெட் போட்டி விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் போது விக்கெட் கீப்பிங் செய்த ரிஷப் பண்ட் தனது ஜெர்ஸியின் நெஞ்சுப்பகுதியில் டேப் வைத்து மறைத்து விளையாடியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் என்னடா இது ரிஷப் எதற்காக இவ்வாறு செய்துள்ளார் என குழப்பத்தில் இருந்ததோடு பலரும் கேள்விகளை எழுப்பி அவரின் புகைப்படத்தை வைரலாக்கினர்.
இந்நிலையில் தற்போது அதற்கான காரணம் வெளிவந்துள்ளது. அதாவது இரு நாட்டு கிரிக்கெட் அணிகள் மோதும் தொடரின்போது, நெஞ்சுப்பகுதியில் ஸ்பான்சர்ஸ் லோகோ இடம் பெற்றிருக்கும். இதனை ஐசிசி லோகோ பயன்படுத்த அனுமதி இல்லை.
ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே ஐசிசியின் லோகோ பயன்படுத்த எந்த ஒரு அணிக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால் நேற்று ரிஷப் பண்ட் நேற்று உலக கோப்பையின் போது கொடுக்கப்பட்ட ஜெர்சியை அணிய வேண்டிய நிலை ஏற்பட்டதால் பண்ட் அதில் இருந்த ஐசிசி லோகோவை மறைத்தபடி விளையாடுவதே சரியாக இருக்கும் என்பதால் அதனை டேப் மூலம் மறைத்து விளையாடியுள்ளார்.
நேற்றைய தொடரில் இந்தியா 2-0 என்ற ரீதியில் வெற்றி பெற்று தொடரை வென்றது.