INSTAGRAM-ல் சுப்மன் கில் போட்டோவை பார்த்து கோலி சொன்ன விஷயம்.. ‘ஓ.. இத வாங்கிக் கொடுத்ததே நீங்க தானா..!’ வைரலாகும் கமெண்ட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகுஜராத் டைட்டன்ஸ் அணியின் இளம் வீரர் சுப்மன் கில்லிடம் இன்ஸ்டாகிராமில் விராட் கோலி பேசியது வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான சுப்மன் கில், கடந்த 2018-ம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிரடியாக விளையாடினார். அதேபோல் ரஞ்சி கோப்பையிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது.
ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்த சுப்மன் கில், இடையில் ஏற்பட்ட காயம் காரணமாக சில காலம் ஓய்வில் இருந்தார். இதனை அடுத்து அதிக அளவில் ரன் அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார். அதனால் அவரது பேட்டிங் குறித்து விமர்சனம் வைக்கப்பட்டது. இதனை அடுத்து ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் சார்பாக விளையாடி வந்தார். தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்து. சமீபத்தில் நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 84 ரன்கள் விளாசி, தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுப்மன் கில் தனது புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதற்கு கீழே கமெண்ட் செய்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பெங்களூரு அணி வீரருமான விராட் கோலி, ‘வாட்ச் நன்றாக இருக்கிறது’ என பதிவிட்டார். உடனே, ‘இதை கிங் (விராட் கோலி) ஒருவர் பரிசாக அளித்தார்’ என சுப்மன் கில் பதிலளித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனை அடுத்து கடந்த ஆண்டுடன் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகினார். தற்போது தென் ஆப்பிரிக்க வீரர் டு பிளசிஸ் பெங்களூரு அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி, ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று (05.04.2022) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி விளையாட உள்ளது.

மற்ற செய்திகள்
