பிசிசிஐ-யின் இந்திய அணி அறிவிப்புக்கும்... MI VS RCB மேட்ச்சுக்கும்... நடுவுல ஒரு 'தரமான சம்பவம்' நடந்திருக்கு!.. மன உளைச்சலில் கோலி... 'சகுனி'யாக மாறிய சூர்யகுமார்!?.. அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | Oct 30, 2020 07:37 PM

மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் கோலி கோபமாக நடந்து கொண்டது ஏன் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

rcb vs mi kohli angry against surya kumar bcci team india reason

மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையில் நேற்று முதல்நாள் நடந்த போட்டியில் கோலி மிகவும் கோபமாக காணப்பட்டார். போட்டியின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை கோலி கோபமாக காணப்பட்டார்.

அதிலும் மும்பை வீரர்கள் சிலரிடம் கோலி நடந்து கொண்ட விதமும், சக இந்திய வீரர்களையே கோலி ஸ்லெட்ஜ் செய்த விதமும் பெரிய அளவில் சர்ச்சையானது. முக்கியமாக மும்பையை சேர்ந்த சூர்ய குமார் யாதவை கோலி மிகவும் மோசமாக நடத்தினார்.

ஒவ்வொரு முறை சூர்ய குமார் பந்தை தடுக்கும் போதும் கோலி கோபமாக பந்தை தூக்கி அவர் மீது எறிவது போல ஆக்சன் செய்தார். பல முறை இவர்கள் மைதானத்தில் முறைத்துக் கொண்டனர். 

அதிலும் கோலி 13வது ஓவர் முடிவில் சூர்ய குமார் யாதவ் அருகில் போய் கோபமாக நின்றதும், அதற்கு சூர்ய குமார் யாதவ் கோபமாக முறைத்து பார்த்ததும் பெரிய சர்ச்சையானது.

இதில் கோலி நடந்து கொண்ட விதம்தான் தவறானது, கோலியின் செயல்தான் தவறானது என்று பலரும் விமர்சனம் வைத்து வருகிறார்கள். இந்த நிலையில், கோலி அப்படி நடந்து கொண்டதற்கு காரணம் இருக்கிறது என்கிறார்கள்.

தன் மீது வைக்கப்பட்ட பிரஷர் காரணமாகவே கோலி இப்படி செயல்பட்டார். அவருக்கு நிறைய ரகசிய அழுத்தம் கொடுக்கப்பட்டது. அந்த கோபத்தை சூர்ய குமார் மீது கோலி காட்டினார் என்கிறார்கள். 

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் சூர்ய குமார் யாதவை தேர்வு செய்யவில்லை. இதனால் கோலி மீது விமர்சனம் வைக்கப்பட்டது. முன்னாள் வீரர்கள் பலர் கோலிக்கு எதிராக விமர்சனம் வைத்தனர்.

இந்த விமர்சனங்களில் சில, சூர்ய குமார் யாதவ் மூலம் வைக்கப்பட்டது என்கிறார்கள். அதாவது தனக்கு நெருக்கமான முன்னாள் வீரர்கள், வெளிநாட்டு வீரர்களை தனக்கு ஆதரவாக சூர்ய குமார் யாதவ் பேச வைத்துள்ளார் என்கிறார்கள். 

பொல்லார்ட் கூட போட்டிக்கு பின் இந்திய அணி தேர்வு குறித்து பேசினார். ஹர்பஜன் உள்ளிட்ட பலர் சூர்ய குமார் யாதவிற்கு ஆதரவாக பேசினார்கள். இதனால் கோலிக்கு இந்திய அணியின் தேர்வில் பெரிய பிரஷர் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்போதும் கூட அணியின் தேர்வை மாற்ற வேண்டும் என்று ஆலோசனைகள் நடந்து வருகிறது.  ஒரே ஒரு வீரரால் மொத்தமாக தேர்வுக்குழுவே பெரிய பிரஷருக்கு உள்ளாகி உள்ளது. அதுவும் இந்த தேர்வுக்குழு புதிதாக பதவி ஏற்ற குழு. இதனால்தான் கோலியும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். சூர்ய குமார் மீது உள்ள இந்த கோபத்தை வெளிக்காட்டவே கோலி அப்படி நடந்து கொண்டார் என்கிறார்கள்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rcb vs mi kohli angry against surya kumar bcci team india reason | Sports News.