“அந்த முடிவு ஜடேஜாவோடது கிடையாது.. தோனி எடுத்தது”.. பரபரப்பு கருத்தை சொன்ன முன்னாள் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுலக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிவம் துபேவுக்கு 19-வது உரை கொடுத்தது தோனியின் முடிவுதான் என முன்னாள் வீரர் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி கடந்த மார்ச் 31-ஆம் தேதி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை குவித்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த லக்னோ 19.3 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபே 19-வது ஓவரை வீசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. அப்போட்டியில் அதுவரை அவர் ஓவர் கூட வீசவில்லை. அப்படி உள்ள சூழலில் ஆட்டத்தின் முக்கியமான ஓவரை வீச அவரை கேப்டன் ஜடேஜா அழைத்தார். ஆனால் அந்த ஓவரில் 25 ரன்கள் சென்றது. இதுதான் ஆட்டத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதற்காக சிஎஸ்கே அணியை முன்னாள் வீரர்கள் பலரும் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘எவின் லூயிஸ் சுழற்பந்து வீச்சில் நன்றாக விளையாட மாட்டார். ஆனால் மொயின் அலிக்கு மூன்று ஓவர்கள் இருந்தும் அவருக்கு கொடுக்கவில்லை. எவின் லூயிஸ் சுழற்பந்து வீச்சில் நன்றாக விளையாடவில்லை என்பதனால்தான் மும்பை அணி அவரை விடுவித்தது. இவர் வேகப்பந்து வீச்சாளர்கள் ஓவரில் சிக்சர் விளாச கூடியவர்.
அதனால் மொயின் அலிக்கு 19-வது ஓவரை கொடுக்காதது ஜடேஜாவின் முடிவு இல்லை. அவர் இப்போதுதான் கற்றுக்கொண்டு வருகிறார். இந்த இந்த முடிவு தோனியால் எடுக்கப்பட்டுள்ளது’ என முகமது தெரிவித்துள்ளார். அப்போட்டியில் 23 பந்துகளில் 55 ரன்கள் விளாசிய எவின் லூயிஸ், கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து லக்னோ அணியை வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
