RCB பேன்ஸ்-க்கு மேலும் ஒரு 'SAD' நியூஸ்...! 'அந்த 2 டீம்-க்கும் பிரச்சனை தான்...' ப்ளான் பண்ண மாதிரி மேட்ச் நடக்குமா...? - கலக்கத்தில் ரசிகர்கள்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் தீவிரமாகி வருகிறது. இந்த நிலையில், ஐ.பி.எல் போட்டிகள் வரும் 9-ம் தேதி தொடங்கவுள்ளது,
தொடங்குவதற்கு முன்னரே டெல்லி அணி வீரர் அக்ஸர் படேல், பெங்களூர் அணி வீரர் தேவதத் படிக்கல் போன்றோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் செய்யப்பட்டது. இதைதவிர மும்பை மைதான ஆடுகளப் பராமரிப்பாளர்கள் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒஒருவரான கிரண் மோருக்கு நேற்று (06.04.2021) கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதேபோல் இன்றும் (07-04-2021) பெங்களூர் அணி வீரர் டேனியல் சாம்ஸ்க்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவுமில்லை என பெங்களூர் அணி நிர்வாகம் கூறியுள்ளது.
வரும் 9-ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள், ஐபிஎல் தொடரின் முதல் மேட்சாக மோதவிருக்கும் நிலையில், மும்பை மற்றும் பெங்களூர் அணி குழுக்களில் கொரோனா வைரஸ் உறுதியாகிருப்பதால், திட்டமிட்டபடி போட்டியை மேட்ச் நடப்பதில் தடங்கல் உருவாகியுள்ளது. ஆனாலும் பாதுகாப்போடு திட்டமிட்டபடி மேட்ச் நடக்கும் என்றே ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.