முதல் நாளே ஜடேஜாவுக்கு டெஸ்ட் வச்ச கோச் டிராவிட்.. மனுஷன் அசால்ட் பண்ணிட்டாப்ல..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது துவங்கி இருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
முன்னதாக நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் முன்னேறுவதற்கு இந்திய அணி இந்த தொடரைக் கைப்பற்ற வேண்டிய சூழலில் உள்ளது. அப்படி இருக்கையில் தொடரையும் வெற்றியுடன் இந்திய அணி தொடங்கி உள்ளதால் நிச்சயம் அடுத்தடுத்த போட்டிகளிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
அதே வேளையில், முதல் போட்டி தோல்விக்கு நிச்சயம் ஆஸ்திரேலியா அணி பதிலடி கொடுக்கும் வகையில் டெல்லி மைதானத்தை கணித்து ஆடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுக்குமே இரண்டாவது டெஸ்ட் போட்டி முக்கியமான ஒன்று என்பதால் இந்த போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த தொடரில் ஆரம்பத்தில் இருந்தே இந்திய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தெரிவித்திருந்தனர். அதேபோல தான் முதல் டெஸ்ட் போட்டியும் நடைபெற்றது. இந்திய அணியின் அஷ்வின் மற்றும் ஜடேஜா இணை சிறப்பாக செயல்பட்டு ஆட்டத்தின் போக்கையே மாற்றினர்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் சந்தித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஜடேஜாவின் பங்களிப்பு பற்றி பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில்,"அவருக்கு (ஜடேஜா) முதல் நாளே நாங்கள் ஒரு டெஸ்ட் வைத்தோம். அவரை 22 ஓவர்களை வீச செய்தோம். அவர் சிறப்பாகவே செயல்பட்டார். தொடர்ந்து பந்துவீசி தன்னுடைய உடற்தகுதியை அவர் நிரூபித்துவிட்டார். டெஸ்டிலும் அவர் தேர்ச்சி அடைந்திருக்கிறார். அவர் அணிக்கு திரும்பியது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
Images are subject to © copyright to their respective owners.
முன்னதாக காயம் காரணமாக ஜடேஜாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அதில் இருந்து குணமாகி வந்த ஜடேஜா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 70 ரன்களையும் எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.