"இவன் பேர் சொன்னதும் பெருமை சொன்னதும்".. ரோஹித் ஷர்மாவுக்காக பாகிஸ்தானில் ரசிகர் வெச்ச பேனர்.. ட்ரெண்டிங்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டெஸ்ட் போட்டி, டெல்லியில் வைத்து நாளை (17.02.2023) நடைபெற உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.
4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகிறது. இதன் முதல் போட்டி, நாக்பூர் மைதானத்தில் வைத்து நடைபெற்றிருந்தது. இந்த போட்டியில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி இருந்த இந்திய கிரிக்கெட் அணி, இரண்டரை நாட்களில் போட்டியை முடித்து இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியையும் பெற்றிருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா, அஸ்வின் உள்ளிட்டோர் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். அதே போல, கேப்டன் ரோஹித் ஷர்மாவும் சதமடித்து அசத்தி இருந்தார். சமீபத்திய தொடர்களில் சிறப்பாக ஆடவில்லை என்ற விமர்சனம், ரோஹித்தை சுற்றி இருந்து வந்தது. அப்படி ஒரு சூழலில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சதமடித்திருந்த ரோஹித் ஷர்மா, அடுத்து நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் சதமடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பி உள்ளார்.
இதனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் ஷர்மா தனது பேட்டிங் ஃபார்மை தொடர்வார் என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தானில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் செய்த விஷயம், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது போல, பாகிஸ்தானில் வைத்து PSL டி 20 லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல சர்வதேச வீரர்களும் ஆடி வரும் சூழலில், ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பு நிறைந்த வண்ணம் சென்று கொண்டிருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
இதனிடையே, இந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் ஒரு போட்டி நடைபெற்ற சமயத்தில் அங்கே வந்த ரசிகர் ஒருவர், இந்திய வீரர் ரோஹித் ஷர்மாவின் பேனர் ஒன்றை மைதானத்தில் கொண்டு வந்துள்ளார். ஒரு பக்கம் தனது புகைப்படமும், மறுபக்கம் ரோஹித் புகைப்படமும் இந்த பேனரில் இடம்பெற்றுள்ள சூழலில் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.
Also Read | 3000 அடி உயரமான மலையில் அருற்பாலிக்கும் விநாயகர்.. அங்கு சென்று வியப்பை ஏற்படுத்திய பூசாரி.!

மற்ற செய்திகள்
