அங்க வச்சு 'எப்படி' விளையாடுனார்னு நியாபகம் இருக்கா...? அவருக்கெல்லாம் 'ஒரு மேட்ச்' போதும்...! - சக வீரருக்கு 'சப்போர்ட்' செய்த புஜாரா...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதொடர்ந்து மோசமாக விளையாடி வருவதற்கு விமர்சனங்கள் வந்த வீரருக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார் சித்தேஸ்வரர் புஜாரா.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வருகிற 25-ஆம் தேதி நடைபெறுகிறது. முதல் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ரஹானே மோசமாக ஆடியதால் அணியில் அவருக்கான இடம் கேள்விக்குறியாக மாறியது.
இந்த நிலையில், தற்போது நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு அளித்தது ஏன்? என முன்னாள் வீரர்கள் பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், ரஹானேவிற்க்கு சக அணி வீரர் புஜாரா ஆதரவாக பேசியுள்ளார்.
அவர் கூறும்போது, ரஹானே போன்ற நல்ல வீரரை எந்த ஒரு கேப்டனுக்கும் வெளியில் அமர்த்த தயக்கமாக தான் இருக்கும். அவர் மிகச்சிறந்த வீரர் ஆவார். ஒவ்வொரு வீரருக்கும் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் வருவது சகஜம் தான். அதற்காக அவரை குறைத்து மதிப்பிட முடியாது.
ஆஸ்திரேலியாவில் வைத்து ரஹானே எப்படி விளையாடினார் என்பது அனைவருக்கும் நியாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். அதனைக் கருத்தில் கொண்டு பேசுவதே நல்லது. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் நிச்சயம் அவரால் நன்கு விளையாட முடியும். அந்த நம்பிக்கை எங்களிடம் நிறையவே உள்ளது.
அவரை எதற்காக அணியில் எடுத்தீர்கள் என கேள்வி எழுப்புவதற்கு முன்னர், அவர் எப்படிப்பட்ட வீரர்? என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும். அவருக்கெல்லாம் ஒரே ஒரு சிறந்த ஆட்டம் போதும். மறுபடியும் தன்னுடைய அதிரடி ஆட்டத்திற்கு வந்து விடுவார்.” என ஆதரவாக பேசியுள்ளார்.