"அவரு நல்ல 'பிளேயர்' தான்.. அதுல டவுட்டு இல்ல.. ஆனா, ஐபிஎல் அவருக்கு செட் ஆகுமா??.." 'சிஎஸ்கே' முன்பு பிரெட் லீ வைத்த 'கேள்வி'.. 'பரபரப்பு' சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் 2021 தொடரில் இந்த முறை சிஎஸ்கே அணிக்காக விளையாட இருக்கிறார் புஜாரா.
சிறந்த டெஸ்ட் வீரராக கருதப்படும் இவர் ஐபிஎல் போட்டிகளில் கடந்த 2014-க்கு பிறகு இந்த சீசனில்தான் விளையாட இருக்கிறார். இதனால் சற்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 64 T-20 போட்டிகளில் விளையாடியுள்ளார், கடைசியாக கடந்த 2019-ல் நடைபெற்ற சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடியுள்ளார். இந்த நிலையில் டெஸ்ட் ஆட்டகாரர் என்ற நிலையில் இருந்து T-20 கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறு புஜாரா மாறுவாரா என்று முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ கேள்வி எழுப்பியுள்ளார்.
புஜாரா சிறந்த கிரிக்கெட் வீரராக அவரது திறமை குறித்து எந்த சந்தேகமும் இல்லை என கூறியுள்ளார். ஆனால் ஐபிஎல் போட்டிகள் என்பது 90 நிமிடங்களில் முடியக்கூடிய T-20 போட்டிகள் ஆகும்.
இந்த மாதிரியான 20 ஓவர் போட்டிகளில் நீங்கள் வேகமாக ரன்களை சேர்க்க வேண்டும். மேலும் அதீத நெருக்கடியான சூழலிலும் விளையாட வேண்டும என்றும் தெரிவித்துள்ளார். கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் நெருக்கடி சூழலில் அவர் தனது சிறப்பை வெளிப்படுத்தியுள்ள நிலையில், தற்போதும் சிறப்பாக விளையாடவும் வாய்ப்புள்ளது.
நான் அவருக்கு தீவிர ரசிகன் என்று தெரிவித்துள்ள பிரட் லீ, அவருக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் ஐபிஎல்லின் T-20 வடிவத்தில் அவர் எவ்வாறு விளையாடுகிறார் என்பதை காண ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.