‘ஆ..டிக்கெட்..டிக்கெட்..டிக்கெட்’.. எங்க? எப்ப? எவ்வளவு? CSK-வின் முக்கிய அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Mar 12, 2019 06:27 PM

‘நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த முக்கிய அறிவிப்பு’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு அதிரடியான தகவலை வெளியிட்டுள்ளது.

important announcement about CSK inaugural match ticket details

ஆம், அதுதான் வரவிருக்கும் விவோ ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கான தேதிகளும் விபரங்களும் பற்றிய அறிவிப்பு.  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக்கொள்ளும் தொடக்க ஆட்டம் வரும் மார்ச் 23-ஆம் தேதி அன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

ஆன்லைன் மற்றும் கவுண்டர்களில் சென்று வாங்க வேண்டிய டிக்கெட்டுகள், வேவ்வேறு சீட்களுக்கு தகுந்த ரேட்டுகள் என டிக்கெட் விற்பனை ரூ.1300 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இந்த டிக்கெட்டுகள் வரும் மார்ச் 16-ஆம் தேதியில் இருந்து விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் உள்ள டிஎன்சிஏ பாக்ஸ் ஆபீஸில் விற்கப்படவுள்ளன. இந்த அலுவலகத்தின் எம்.ஜே.கோபாலன் கேட் வழியாக உள்ளே நுழைந்து டிக்கெட் விற்பனையகத்துக்குச் செல்லலாம்.

கவுண்டர்களைப் பொருத்தவரை ஒரு தனி நபருக்கு 2 டிக்கெட்டுகளுக்கு மேல் தரப்படமாட்டாது என்றும், டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும் முதல் நாளான மார்ச் 16-ஆம் தேதி அன்று மட்டும் காலை 11.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை (இடையில் 12.30 மணி முதல் 2 மணி வரை உணவு இடைவேளை)  டிக்கெட்டுகள் கொடுக்கப்படவுள்ளன என்றும், அடுத்தடுத்த நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை (இடையில் 12.30 மணி முதல் 2 மணி வரை உணவு இடைவேளை)  டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே டிக்கெட்டுகளை புக் மை ஷோ (bookmyshow) இணையதளத்திலும் சென்று புக் செய்துகொள்ளலாம். சென்னை சூப்பர் கிங்ஸின் ஹோம் மேட்சஸ் எனப்படும் தொடக்க ஆட்டங்களை கண்டுகளிப்பதற்கான டிக்கெட் விற்பனை விபரங்களை மட்டுமே தற்போது அறிவித்துள்ளனர். இதர விபரங்கள் விரைவில்  அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags : #IPL #IPLOPENINGCEREMONY #TICKETTICKETTICKET #CSK #IPL2019 #CHENNAISUPERKINGS #PRIDEOF19 #RCB