ஐந்து வருஷ சம்பள 'AMOUNT'.. வேற லெவலில் பிரித்வி ஷா செஞ்ச 'விஷயம்'.. அரண்டு போன ரசிகர்கள்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா, சுமார் ஐந்து வருட ஐபிஎல் சம்பளத்தை வைத்து செய்துள்ள விஷயம் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
![prithvi shaw buys his dream house its worth 5 years ipl salary prithvi shaw buys his dream house its worth 5 years ipl salary](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/prithvi-shaw-buys-his-dream-house-its-worth-5-years-ipl-salary.jpg)
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற U 19 உலக கோப்பை போட்டியை, பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் களமிறங்கி ஆடி வரும் பிரித்வி ஷா, தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால், இந்திய அணியிலும் இடம்பிடித்திருந்தார்.
நல்ல ஃபார்மில் பிரித்வி ஷா
நடுவே அவரது ஆட்டம், சில விமர்சனங்களை சந்தித்திருந்தாலும், மீண்டும் உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் ஆடி தன்னுடைய திறனை நிரூபித்துள்ளார் பிரித்வி ஷா. கடந்த சீசனில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடி இருந்த பிரித்வி ஷாவை அந்த அணி நடப்பு சீசனுக்கு முன்பும் தக்க வைத்துக் கொண்டது. தற்போதைய ஐபிஎல் தொடரிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பிரித்வி ஷா, நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
புதிய பங்களா..
இந்நிலையில், சுமார் 10 கோடி ரூபாய்க்கு தற்போது பிரித்வி ஷா செய்துள்ள செயல் ஒன்று குறித்து தகவல் வெளியாகி உள்ளது. மும்பை பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள சொகுசு அபார்ட்மெண்ட் ஒன்றில், புதிய வீடு ஒன்றை வாங்கி உள்ளார் பிரித்வி ஷா. இதன் மொத்த மதிப்பு, 10.5 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
ஐந்து ஆண்டு ஐபிஎல் சம்பளம்..
இந்த குடியிருப்பின் 8 ஆவது மாடியில் அமைந்திருக்கும் பிரித்வி ஷாவின் வீடு, 2,209 சதுர அடி கொண்டதாக கூறப்படுகிறது. இங்கு 3 கார் பார்க்கிங் வசதி உள்ளிட்ட பல வசதிகள் அமைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், இந்த குடியிருப்பை வாங்க முன்பணமாக, சுமார் 53 லட்சம் கொடுத்து, கடந்த மாதம் ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அதே போல, இதன் பத்திரப்பதிவு சமீபத்தில் முடிவடைந்துள்ளதாகவும் தெரிகிறது. மொத்தம் 10.5 கோடி ரூபாய் இதற்காக பிரித்வி ஷா செலவு செய்துள்ள நிலையில், கடந்த 5 ஆண்டு ஐபிஎல் சம்பளத்திற்கு, இந்த பணம் சமம் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)