கடைசி ஓவர் வீசுறதுக்கு முன்னாடி தோனி என்ன சொன்னார்..? சீக்ரெட்டை ரிவில் பண்ணிய CSK பவுலர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரின் போது தோனி கூறிய அறிவுரை குறித்து முகேஷ் சௌத்ரி பகிர்ந்துள்ளார்.
![Mukesh Choudhary reveals what Dhoni told him at last over against SRH Mukesh Choudhary reveals what Dhoni told him at last over against SRH](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/mukesh-choudhary-reveals-what-dhoni-told-him-at-last-over-against-srh.jpg)
ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 99 ரன்களும், டேவான் கான்வே 85 ரன்களும் எடுத்தனர்.
இதை அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இதில் சென்னை அணியை பொறுத்தவரை முகேஷ் சௌத்ரி 4 விக்கெட்டுகளும், மிட்செல் சான்ட்னர் மற்றும் டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்
இந்த நிலையில் இப்போட்டியின் கடைசி ஓவர் வீசுவதற்கு முன்பு கேப்டன் தோனி என்ன கூறினார் என சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சௌத்ரி கூறியுள்ளார். அதில், ‘தோனி என்னிடம் சாதாரணமாக பந்துவீசு என்று கூறினார். ஆனாலும் நான் ஒருசில வித்தியாசமான பந்துகளை முயற்சித்தேன். அப்போது, சாதாரணமாக பந்துவீசு அது போதும் நோ பால் மட்டும் வீசி விடாதே என தோனி கூறினார்’ என முகேஷ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
இப்போட்டியின் முகேஷ் சௌத்ரி வீசிய கடைசி ஓவரில், சிக்சர் பவுண்டரி என அடுத்தடுத்து சென்றது. அப்போதும் அந்த ஓவரின் நான்காவது பந்தை ஒய்டாக வீசினார். இதனால் கோபமடைந்த தோனி, முகேஷ் சௌத்ரியை கடிந்து கொண்டார். அந்த ஓவரில் மட்டும் 3 சிக்சர் 1 பவுண்டரி உட்பட 24 ரன்கள் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)