‘இன்னும் 20 நிமிஷம் மட்டும் லேட்டா வந்திருந்தீங்க அவ்ளோதான்’!.. ஐசியூவில் இருந்தபோது ‘நர்ஸ்’ சொன்ன வார்த்தை.. பாகிஸ்தான் வீரர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டிக்கு முன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறித்து பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 67 ரன்களும், ஃபகார் ஜமான் 55 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 19 ஓவர்களில் 177 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டிக்கு முந்தை நாள் வரை பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான், கடுமையான நுரையீரல் தொற்று பாதிப்பால் துபாய் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அன்றே அவர் அரையிறுதிப்போட்டியில் விளையாடியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக முகமது ரிஸ்வான் பகிர்ந்துள்ளார். அதில், ‘மூச்சு விட மிகவும் சிரமமாக இருந்தது. அதனால் உடனே மருத்துவமனைக்கு சென்றதும் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது ஒரு செவிலியர், இன்னும் 20 நிமிடம் தாமதமாக வந்திருந்தால் மூச்சுக்குழாயே வெடித்திருக்கும் என கூறினார்’ என்று முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். துபாயில் முகமது ரிஸ்வானுக்கு சிகிச்சையளித்தது இந்திய மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.