ப்ளீஸ், எனக்கு 'அத' அனுப்பி வைப்பீங்களா...? '8 வயது சிறுவன் எழுதிய கடிதம்...' - பாபர் அசாம் கொடுத்த 'வாவ்' ரிப்ளை...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது.

ஐக்கிய அமீரகத்தில் ஐசிசி டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியும், ஆஸ்திரேலியா அணியும் மோதின. இதில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தது.
இந்நிலையில் அடுத்ததாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அபாரமான ஆட்டத்தால் சுமார் 18.5 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 173 ரன்களை எடுத்து டி-20 உலகக்கோப்பையை வென்றது. இதில் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால் இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி முதன் முறையாக T-20 உலக கோப்பையை வென்றுள்ளது.
அதோடு, இந்த கிரிக்கெட் தொடர் முழுதும் பெரிய எதிர்பார்ப்பை பாகிஸ்தான் அணி உருவாக்கியது. அரையிறுதியில் பாகிஸ்தான் அணியும் ஆஸ்திரேலிய அணியும் பங்கேற்றநிலையில் பாகிஸ்தானை வென்று தான் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறி சென்றது
இந்நிலையில், பாகிஸ்தானின் அதிரடி ஆட்டத்தை வியந்து பாபர் அசாமிற்கு 8 வயது சிறுவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதமும் அதற்கு பாபர் கொடுத்த பதிலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறுவன் எழுதிய கடிதத்தில், 'எனக்கு உங்களை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது. நான் உங்களை நேசிக்கிறேன். இந்த கிரிக்கெட் தொடரில் நம்முடைய நாட்டின் வீரர்கள் அனைவரும் நன்றாக விளையாடினர்.
அரையிறுதியில் வெற்றி பெற்றுவிடுவோம் என நினைத்தேன். இருந்தாலும் பரவயில்லை. உங்கள் அனைவரின் ஆட்டோகிராப் போட்ட பேப்பர் எனக்கு அனுப்பி வைக்க முடியுமா?' என எழுதியுள்ளார்.
இதற்கு பாபர் அசாம், 'உங்களின் அன்பான கடிதத்திற்கு நன்றி. உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் எங்களின் ஆட்டோகிராப்பை பெறுவீர்கள். ஆனால் வருங்கால கேப்டனான உங்களது ஆட்டோகிராப் பெற நான் காத்திருக்க முடியாது' என பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
Dear Mohammad Haroon Suria,
Salam,
Thank you for such a kind letter for us, champion. I ABSOLUTELY believe in you and you can achieve anything with your focus, belief, and hardwork.
You will get your autographs but I cant wait to get YOUR autograph future Captain. 🙌 https://t.co/FbalPUeBnC
— Babar Azam (@babarazam258) November 13, 2021

மற்ற செய்திகள்
