‘கொஞ்ச நேரம் தான்’... ‘ஒட்டு மொத்தமாக எல்லாத்தையும் மாற்றி விடுவார்’... 'பயிற்சியாளர் சொன்ன சுவாரஸ்யம்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகாயம் காரணமாக அவதிப்பட்ட வந்த நிலையிலும், அதனை பொருட்படுத்தாமல் கொல்கத்தா அணிக்காக ஆடிய ஆண்ட்ரு ரசல் களத்திற்கு வந்தார் என்று அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் ஆடிய கொல்கத்தா 191 ரன்கள் எடுக்க, அதற்கு அடுத்து ஆடிய ராஜஸ்தான் 131 ரன்களில் சுருண்டது. நேற்று காயத்துடன் களத்தில் வந்து ஆடிய ரசல் 11 பந்தில் 3 சிக்ஸ் உட்பட 25 ரன்கள் எடுத்தார். காயத்தோடு இவர் அடித்த 25 ரன்கள், கொல்கத்தா அணியின் ரன் ரேட்டை உயர்த்தி உள்ளது.
ரசலின் ஆட்டம் குறித்து பேட்டி அளித்த மெக்கலம், ‘காயத்திலும் கட்டாயம் வென்று ஆக வேண்டிய போட்டி என்பதால், ஆண்ட்ரு ரசல் கொல்கத்தா அணிக்காக களமிறங்கி ஆட வந்தார். ஆனால் அவர் முழுமையாக குணமடையவில்லை. அவர் முழு பிட்னசில் இல்லை. ஆனாலும் அவர் அணிக்காக களமிறங்கினார். இதனால் அவரால் பவுலிங் செய்யவும் முடியவில்லை.
ஆபத்தான சூழ்நிலையில் இருந்தாலும், அணி வெற்றி பெற வேண்டும், முக்கியமான போட்டி என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இதனால் ரசல் தனது காயத்தை பொருட்படுத்தாமல், உடனே களத்திற்கு செல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருந்தார். அணிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் 100% குணமடையவில்லை. ஆனாலும் அணிக்காக ஆடுகிறார். அவர் ஒரு 15-20 நிமிடம் ஆடினார். மொத்தமாக ஆட்டத்தையே மாற்றிவிட்டார்.
அவர் எங்கள் அணியின் தூண் போல இருக்கிறார். இதனால்தான் காயத்தை கூட அவர் கணக்கில் கொள்ளவில்லை. அவர் உலகின் சிறந்த டி-20 வீரர்களில் ஒருவர். அவர் இந்த சீசனில் சரியாக ஆடவில்லை. ஆனால் ஒரே ஒரு போட்டியில் அவர் பார்மிற்கு திரும்பினால் போதும், எல்லாமே மொத்தமாக மாறிவிடும்’ என்று அணியின் பயிற்சியாளர் மெக்கலம் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
