இந்திய பேட்ஸ்மேனின் தலையில் பட்ட பவுன்சர்.. 60 வருஷத்துக்கு அப்புறம் டாக்டர் சொல்லிய அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் நாரி கான்டராக்டர்-ன் தலையில் பொருத்தியிருந்த மெட்டல் பிளேட்டை 60 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிகரமாக வெளியே எடுத்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.
முக்கியமான மேட்ச்ல மாரடோனா போட்ருந்த டிஷர்ட் ஏலம்..ஆரம்ப விலையே இவ்வளவு கோடியா?
நாரி கான்ட்ராக்டர்
1934 ஆம் ஆண்டு பிறந்த நாரி கான்டராக்டர் இந்திய கிரிக்கெட் அணியில் 1955 ஆம் ஆண்டு இணைந்தார். இவர் மொத்தம் 31 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 1962 ஆம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் நாரி கான்டராக்டரும் இருந்தார்.
பார்படோஸில் நடைபெற்ற போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி பவுலர் சார்லி கிரிஃபித் வீசிய பவுன்சர் நாரி கான்டராக்டரின் தலையை தாக்கியது. ஹெல்மெட் அணியாததன் காரணமாக நாரி-க்கு இதனால் கடுமையான காயம் ஏற்பட்டது.
சிகிச்சை
இதனை அடுத்து மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார் நாரி. அடுத்தடுத்து நடைபெற்ற அறுவை சிகிச்சையின் பலனாக அவர் நலமடைந்தார். கபால எலும்பில் ஏற்பட்ட சேதம் காரணமாக டைட்டானியம் பிளேட் ஒன்றினை மருத்துவர்கள் நாரியின் தலைக்குள் பொருத்தி இருந்தனர்.
இந்நிலையில் தற்போது 88 வயதான நாரிக்கு மீண்டும் அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. வயது மூப்பு காரணமாக அவருடைய தலையில் வைக்கப்பட்டிருந்த உலோக பிளேட்டை அப்புறப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் கூறியதை அடுத்து வேறுவழியின்றி அறுவை சிகிச்சைக்கு சம்மதித்திருக்கிறார் நாரி.
ஆப்பரேஷன்
இந்நிலையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாரிக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் சுமார் 60 ஆண்டுகாலம் அவரது தலைக்குள் இருந்த டைட்டானியம் பிளேட் தற்போது வெளியே எடுக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து பேசிய அவரது மகன் ஹொஸேதார்," ஒரு மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது. அவர் நலமாகி வருகிறார்" என்றார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் நாரியின் நண்பருமான சந்து போர்டே அவருடைய உடல்நலம் குறித்து அவ்வப்போது விசாரித்துவந்திருக்கிறார் இதுபற்றி அவர் பேசுகையில்,"அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். அவர் ஒரு சிறந்த போராளி என்பதை நான் அறிவேன். நாங்கள் பார்படாஸில் இருந்தபோது அவருக்கு ரத்தம் கொடுத்தது எனக்கு நினைவிருக்கிறது. அவர் இதை எதிர்த்துப் போராடுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்,” என்றார்.
ஒரே நேரத்துல 9 மனைவிகளுடன் வசித்த ரெமோ.. திடீர்னு அந்நியனா மாறிய ஒரு மனைவி..