எங்க ஊர்ல ரொம்ப வசதி எல்லாம் கிடையாது.. என் அப்பா 30 கி.மீ ‘சைக்கிள்’ மிதித்து என்னை கூப்ட்டு வருவாரு.. இந்திய வீரர் உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த முகமது ஷமி தனது தந்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 327 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 174 ரன்கள் எடுத்தது. அதேபோல் தென் ஆப்பிரிக்க அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் எடுத்தது. அதனால் 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து வருகிறது.
இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதனை 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முகமது ஷமி படைத்துள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து பேசிய முகமது ஷமி, ‘நான் இன்றைக்கு இந்த இடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் என் அப்பாதான். நான் வசதிகள் அதிகம் இல்லாத கிராமத்தில் இருந்து வந்துள்ளேன். என்னை பயிற்சிக்கு அழைத்து செல்ல என் அப்பா 30 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டுவார். அந்த கடினமான நாட்களை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன்.
வெற்றி பெற நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். அப்படி கடினமாக உழைத்தால் சிறந்த முடிவுகளை பெறுவீர்கள். டெஸ்ட் மேட்ச் என்பது ராக்கெட் விஞ்ஞானம் அல்ல. நீங்கள் ஒரு டெஸ்ட் பந்து வீச்சாளராக இருந்தால், உங்கள் உயரத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நிலைமைகளைப் பற்றிய யோசனையும் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும்’ என முகமது ஷமி கூறியுள்ளார்.