அடுத்த வருஷமும் CSK காக விளையாடுவீங்களா? தோனி கூறிய ஸ்மார்ட் பதில்.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அடுத்த வருடமும் தொடர்ந்து விளையாடுவீர்களா என்ற கேள்விக்கு அளித்த பதில் அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

ஐபிஎல் 2022
நடப்பு ஐபிஎல் தொடருக்கான ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் நடைபெற்றது. இதன் காரணமாக பல்வேறு வீரர்கள் புதிய அணிகளுக்கு மாறினர். ஏற்கனவே நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகளின் வருகை பரபரப்பை கிளப்பி இருந்த நிலையில் வீரர்கள் இடமாற்றம் ரசிகர்களின் ஆர்வத்தை எகிற வைத்தது. இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைப்பதாக தோனி அறிவித்தார்.
சறுக்கல்
சென்னை சூப்பர் கிங்ஸ் என்றாலே தல தோனி என்ற அளவிற்கு சென்னை அணியின் ரசிகர்கள் தோனியின் மீது தீரா காதலுடன் இருக்கின்றனர். அந்த வகையில் கேப்டன்சி பொறுப்பை ஜடேஜாவுக்கு விட்டுக்கொடுத்த தோனியின் முடிவு பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. இது ஒரு பக்கம் என்றால் ஜடேஜா தலைமையில் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அவரது தலைமையில் 8 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி இரண்டு போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடம் ஒப்படைப்பதாக அறிவித்தார் ஜடேஜா.
மீண்டும் கேப்டனாக
இந்நிலையில் நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டனாக மீண்டும் களம் கண்டார் மஹேந்திர சிங் தோனி. மேட்ச் தொடங்குவதற்கு முன்னதாக டாஸில் பங்கேற்க வந்த தோனியிடம் "அடுத்த ஆண்டும் உங்களை மஞ்சள் நிற ஜெர்சியில் பார்க்கலாமா?" என வர்ணனையாளர் கேட்டார். அதற்கு பதில் அளித்த தோனி "இந்த மஞ்சள் ஜெர்சியோ அல்லது வேறு மஞ்சள் ஜெர்சியோ எதுவாக இருந்தாலும் அடுத்த ஆண்டு நீங்கள் நிச்சயமாக என்னை மஞ்சள் நிற ஜெர்சியில் பார்ப்பீர்கள்" என்றார்.
ஏற்கனவே கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகியதால் அவருக்கு இது கடைசி ஐபிஎல் ஆக இருக்குமோ என ரசிகர்கள் அச்சப்பட்டு வந்த வேளையில் நேற்றைய போட்டியில் தோனி பேசியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
MS Dhoni Is An Emotion! 💛
Thala is back to lead @ChennaiIPL once again!
Follow the match 👉 https://t.co/8IteJVPMqJ#TATAIPL | #SRHvCSK pic.twitter.com/XV9OAd1OB2
— IndianPremierLeague (@IPL) May 1, 2022
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
