கடைசி வரை இருந்த நம்பிக்கை.. தோனி அவுட்டானதும் மைதானத்தில் நடந்த விஷயம்.. "இதுனால தான்'ங்க அவர் பெஸ்ட் 'பினிஷர்'.."
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முந்தைய போட்டியில், கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், மீண்டும் தோல்வி பாதைக்கு திரும்பியுள்ளது.

மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் சிஎஸ்கே மோதி இருந்தது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 88 ரன்கள் எடுத்திருந்தார்.
ராயுடு மட்டும் அதிரடி..
இதன் பின்னர், இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ராயுடுவை தவிர எந்த வீரரும் பெரிதாக ரன் குவிக்காததால், சென்னை அணியின் தேவைப்பட்ட ரன் ரேட் அதிகமாகி கொண்டே இருந்தது. 39 பந்துகளில், 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் எடுத்திருந்த ராயுடு, ரபாடா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
தோனி மீது இருந்த நம்பிக்கை
இதன் பின்னர், கடைசி இரண்டு ஓவர்களில், சிஎஸ்கேவின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. இதில், 19 ஆவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, பிரதமாக பந்து வீசி இருந்தார். இதனால், கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. ஐபிஎல் தொடரில் எந்த அணிகளும் இதுவரை கடைசி ஓவரில் 27 ரன்கள் அடித்ததில்லை என்ற போதும், களத்தில் தோனி இருந்ததால் சிஎஸ்கே ரசிகர்களிடம் ஓரளவுக்கு நம்பிக்கை இருந்தது.
கடைசி ஓவரின் முதல் பந்தினை சந்தித்த தோனி, அதனை சிக்சருக்கு அனுப்பினார். தொடர்ந்து, இரண்டாவது பந்து டாட் ஆகவே, 4 பந்துகளில் 20 ரன்கள் தேவைப்பட்டது. நிச்சயம் மேஜிக் தான் நடக்க வேண்டும் என்ற போதும், தோனி இருந்தது இன்னும் அதிக நம்பிக்கையை அளித்திருந்தது.
அவுட்டான தோனி..
ஆனால், ஓவரின் 3 ஆவது பந்தில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து தோனி அவுட் ஆனார். இதனால், சிஎஸ்கே அணி வெற்றி பெறும் வாய்ப்பும் தகர்ந்தது. இந்நிலையில், தோனி அவுட்டானதும் நடந்த சம்பவம் ஒன்று, தோனி ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. மும்பை அணிக்கு எதிரான முந்தைய போட்டியில், கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து மிரள வைத்தார் தோனி.
மைதானத்தில் நடந்தது என்ன?
அதே போல, இந்த முறையும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தோனி அவுட்டானதும் கேட்சினை பிடித்த பேர்ஸ்டோவ் மற்றும் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ஜாண்டி ரோட்ஸ் உள்ளிட்ட அங்கிருந்த பலரும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.
4 பந்துகளில் 20 ரன்கள் என்ற நிலையிலும், தோனி இருந்ததால் முடிவு மாறலாம் என்று கருதிய அவர்கள், தோனி அவுட்டானதும் அதனை கொண்டாடிய விதம் பற்றி, தோனி ரசிகர்கள் கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
