“வேற வழியில்ல.. தோனிக்கு அப்புறம் CSK-க்கு புது கேப்டனை அங்க இருந்துதான் எடுக்கணும்”.. முன்னாள் வீரர் ஓபன் டாக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனிக்கு பின் சிஎஸ்கே அணியில் கேப்டனாக பொறுப்பேற்க யாருமே இல்லை என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.
Also Read | “சாதாரண பயனர்களுக்கு டுவிட்டர் இலவசம்தான், ஆனால்...!” திடீரென ‘ட்விஸ்ட்’ வச்ச எலான் மஸ்க்..!
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார். இதனை அடுத்து புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் ஜடேஜா பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் தலைமையில் 8 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது. அதனால் ஜடேஜா மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் திடீரென மீண்டும் தோனியிடமே கேப்டன் பொறுப்பை ஒப்படைப்பதாக ஜடேஜா தெரிவித்தார். இதனை அடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து தோனி கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொண்டார். அதனால் தோனிக்கு பின் சிஎஸ்கே அணியை வழிநடத்த யார் போகிறார்கள்? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘இந்த ஆண்டு இறுதியில் தோனியிடம் இருந்து யார் கேப்டன் பொறுப்பை பெறப் போகிறார்கள்? இந்த அணியை திறம்பட வழி நடத்தக்கூடிய ஒரு வீரரைக் கூட சிஎஸ்கே அணியில் என்னால் பார்க்க முடியவில்லை. அவர்கள் அடுத்த ஆண்டு கேப்டன்சி திறன் கொண்ட ஒரு வீரரைக் கண்டுபிடிக்க ஏலத்திற்குச் செல்ல வேண்டும். இதுவும் கடினமாக இருக்கும்.
ஏனென்றால் அனைத்து சிறந்த இந்திய டி20 வீரர்களும் ஏற்கனவே மற்ற அணிகளில் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். அதனால் சிஎஸ்கே அணி ஒரு சர்வதேச வீரரிடம் தான் செல்ல வேண்டும். சிஎஸ்கே ஏற்கனவே வைத்திருக்கும் கேம் திட்டத்திற்கு பொருந்தக்கூடிய ஒரு வீரரைக் கேப்டனாக கண்டுபிடிப்பது கடினம்’ என பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 4 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8